BREAKING NEWS

ஜவாதை போன்ற சமூக அக்கறை கொண்டவர்கள் மாகாண சபை தேர்தலில் தோற்ற பின் இவ்வாறு கூறுவதுதான் பரிய கேள்விக்குறி

முஸ்லிம் காங்கிரசின் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாதின் கருத்து பாராட்டுக்குரியதாக இருந்தாலும் இனவாத அரசுக்கு முட்டுக்கொடு:க்கும் அக்கட்சியின் உயர்பீட உறுப்பினர் பதவியைக்கூட இவரால்;
ராஜினாமா செய்ய முடியாமலிருப்புது ஏன் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததவது,

அமைச்சுப்பதவிகளை ராஜினாமா செய்தால் ஜனாதிபதியுடன் பேச முடியாது என கூறும்  தவம் போன்றவர்களின் அரசியல் அறிவற்ற கருத்துக்களுக்கு நாம் ஏற்கனவே ஆணித்தரமான பதிலை வழங்கியுள்ளோம். ஆனாலும் யாரெல்லாம் முஸ்லிம் காஙகிரசில் சேர்கின்றனரோ அவர்களுக்கெல்லாம் இவ்வாறான சுயநலவாத கருத்துக்கள் ஏற்படுவதை பல தடவைகள் கண்டுள்ளோம். காரணம் மு. கா என்பது சுயநலனை மட்டுமே கருத்திற்கொண்ட கட்சியாகும். ஆனாலும் ஜவாதை போன்ற சமூக அக்கறை கொண்டவர்கள் மாகாண சபை தேர்தலில் தோற்ற பின் இவ்வாறு கூறுவதுதான் பரிய கேள்விக்குறியாக உள்ளது.

ஜவாத் கடந்த கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக இருக்கும் போதுதான் தம்புள்ள பள்ளிவாயல் தாக்கப்பட்டது. தெஹிவல போன்ற பள்ளிவாயல்களும் தாக்கப்பட்டன. இவ்வேளையிலும் இவரது கட்சித்தலைவர் அமைச்சராகத்தான் இருந்தார். ஆனால் இவர் தமது தலைமையை ராஜினாமா செய்ய சொல்லவுமில்லை, தானும் மாகாண சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுமில்லை. அத்தோடு தலைவர் அமைச்சராக இருக்கும் போதே கிழக்கு மாகாண சபையில் தனித்து போட்டியிடுமு; நாடகத்துக்கும் துணை போனார்.

இன்றைய இந்த சூழ் நிலைகளில் இனவாத அரசுக்கு முட்டுக்கொடுக்கும் இவர்களின் கட்சித்தலைமகள் அமைச்சுப்பதவிகளை ராஜினாமா செய்யாமல் இருப்பதும் சரிதான் அக்கட்சியின் உயர் பட உறுப்பினராக இவர் இருந்து இனவாதத்துக்கு துணைபோவதும் ஒன்றுதான். கட்சியின் உயர் பீட உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால் தன்னால் உயர் பீட கூட்டத்தில் கட்சியை விமர்சித்து பேச முடியாது என்றுதான் ஜவாத் நியாயம் கூறுவார். இவ்வாறுதான் அமைச்சுப்பகதவிகளை ராஜினாமா செய்தால் அமைச்சரவை கூட்;டத்தில் முஸ்;லிம்கள் பற்றி பேச முடியாது என தவம் போன்றவர்கள் வேதாந்தம் பேசுகிறார்கள்.

ஆக மொத்தத்தில் அனைவருமே சுய நல அரசியலுக்காய முஸ்லிம்களை பகிரங்கமாகவே ஏமாற்றுகிறார்கள். உண்மையில் ஜவாத் அவர்கள் தனது கருத்தில் தெளிவானவராக இருந்தால் சுயநல கட்சியான முஸ்லிம் காங்கிரசின் அங்கத்துவத்தை ராஜினாமா செய்து விட்டு கல்முனையை தளமாகக்கொண்ட முஸ்லிம் மக்கள் கட்சியை பலப்படுத்த முன் வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar