ஜனாதிபதி தம்மோடு பேச்சுவார்த்தை நடத்தினால் 19வது திருத்த சட்டத்துக்கு ஆதரவளிப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய இணைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன் தெரிவித்தார்.
நேற்று ஹிரு எப். எம். தொலைக்காட்சிக்களித்த பேட்டியிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில் 19வது அரசியல் திருத்தம் சம்பந்தமாக உகண்டா சென்றிருக்கும் ஜனாதிபதி வந்ததும் தமது கட்சியுடன் பேசினால் அச்சட்ட மூலத்துக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என்றும் இல்லாவிடில் ஆதரிக்காது என்றும் கூறினார். இதே நேரம் ஹக்கீம் ஆதரித்தாலும் கட்சி இதனை ஆதரிக்காது என செயலாளர் ஹசன் அலி கூறியுள்ளார். 19 வது திருத்தச் சட்டம் என்பது மாகாண சபைகளுக்குள்ள காணி, பொலிஸ் அதிகாரத்தை இல்லாமல் செய்வதாகும். இதனை திருத்தும் படி ஜாதிக ஹெல உறுமய, விமல் வீரவன்ச போன்றவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார்கள். ஆக, முஸ்லிம்களின் உரிமைக்குரல் என சொல்லும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிர்வாகிகள் இது விடயத்தில் ஒருமித்த கொள்கை இன்றி ஆளாளுக்கு ஒரு கருத்தையும் சொல்வதுடன் ஜனாதிபதியை கண்டு பேசுவதற்கு இத்தனை ஆர்வமாக இருப்பது என் என்பது பலத்த கேள்வியாக உள்ளது. 19வது திருத்த சட்டத்துக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஹெல உறுமய, விமல் ஆகியோரின் கட்சிகளை பின்பற்றப்போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.