கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதிமேயர் அசாத் சாலியின் கைது தொடர்பில் நீதி; அமைச்சரும் மு. கா. தலைவருமான ரவ+ப் ஹக்கீம் தெரிவித்த கருத்து தொடர்பில் தனது கடும் அதிருப்தியை அவரிடம் நேரடியாக தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டே பாதுகாப்புச் செயலாளர் தனது அதிருப்தியை கடும் சீற்றத்துடன் வெளிப்படுத்தினார்.
நீதியமைச்சராக பதவி வகித்துகொண்டு பொறுப்பற்ற விதத்தில் கருத்து கூற வேண்டாம்’’ என்று தொலைபேசியில் தெடர்பு கொண்ட பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ஹக்கீம் மீது கடித்து கொண்டார்.
அசாத் சாலி சட்டவிதிகளுக்கமையவே கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரது கைது முறைப்படியே இடம்பெற்றுள்ளது என்றும் இதன் போது நீதயமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் பாதுகாப்பு செயலாளர் இடித்துரைத்தார்.
அசாத் ஸாலி நாட்டின் இறைமைக்கும் அரசுக்கும் எதிராக பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளார் அதன் அடிப்படையிலேயே நாம் அஸாத் சாலியை கைது செய்துள்ளோம். அவர் அரசுக்கு எதிராக செயற்பட்டதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. தேவையென்றால் பார்வையிடுங்கள்’’ என்று இந்த உரையாடலின் போது ரவூப் ஹக்கீமிடம் பாதுகாப்பு செயலாளர் காட்டத்துடன் தெரிவித்தார். எவ்வாறாயினும் பாதுகாப்பு செயலாளரின் கருத்தை மறுதலித்து அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரவூப் ஹக்கீம் எது எவ்வாறு இருப்பினும் அஸாத் சாலியின் கைது விடயத்தில் அரசின் கருத்துடன் உடன்பட முடியாதிருப்பதாகவும் சுடடிக்காட்டினார்.