13வது திருத்த சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டமைக்கு முஸ்லிம் கட்சிகள் ஆதரவளித்தமை சிறுபான்மை மக்களுக்குச்செய்த மிகப்பெரிய குற்றமாகும்
என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
இரண்டு மாகாணங்களை இணைப்பது விடயத்தில் அமைச்சரவை கூட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள முஸ்லிம் கட்சிகளின் அமைச்சர்கள் ஆதரவளித்தமை தொடர்பாக கேட்கப்பட்ட போதே இவ்வாறு அவர் கூறினார். அவர் தொடர்ந்து கூறியதாவது,
13வது திருத்த சட்;டத்தில் எத்தகைய திருத்தத்துக்கும் ஆதரவளிக்கமாட்டோம் என வீறாப்புடன் பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கடைசியில் அமைச்சரவையில் மௌனமாகி அதற்கு ஆதரவளித்தமை எதிர் பார்க்கப்பட்ட ஒன்றுதான். முதலில் இதனை எதிர்த்த ஹக்கீம் பின்னர் அமைதியாகி விட்டார் என கெஹலிய ரம்புக்வெல உறுதிப்படுத்தியுள்ளார். அமைச்சரவையில் ஆவேசமாக பேசினார் என முஸ்லிம்களுக்கு சொல்லி முஸ்லிம் மக்களை உஷார் மடையர்களாக்கி விட்டு கடைசியில் அமைச்சரவை தீர்மானத்துக்கு ஆதவளித்ததன் மூலம் அரசுக்கான தனது விசுவாசத்தையும் ஹக்கீம் காட்டியுள்ளார்.
அதே போல் இத்தகைய திருத்தத்துக்கு அதாவுள்ளாவும், ரிசாதும் ஆதரவளிப்பார்கள் என்பதும் நூறுநு வீதம் எதிர் பார்த்த ஒன்றுதான். அவ்விரவரும் அரசாங்கத்தை எதிர்த்ததாக வரலாறு இல்லை. எம்மைப் பொறுத்த வரை சிறுபான்மை மக்களின் நலனன கருத்திற்கொண்டு இரண்டு மாகாணங்களையும் இணைக்கும் முதலமைச்சர்களின் அதிகாரம் நீக்கப்பட்டிருந்தால் அது பற்றி சிந்தித்திருக்கலாம். ஆனால் இனவாத கட்சிகளான ஜாதிக்க ஹெல உறுமய மற்றும் விமலின் கட்சிகளின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்று இத்தகைய திருத்தம் கொண்டு வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக்கட்சிகளின் இனவாத செயற்பாடுகளுக்கு இதன் மூலம் வெற்றி கிடைத்துள்ளமையும் அதற்கு முஸ்லிம் கட்சிகளும் தமது அமைச்சுப்பதவிகளை காப்பாற்றிக் கொள்வதற்காக சரணடைந்துள்ளமையும் மிகப்பெரிய வரலாற்றுக் குற்றமாகும்.
இந்த வெற்றி மேலும் பல சிறுபான்மை மக்களின் உரிமைகளை முஸ்லிம் கட்சித்தலைவர்களை பதவியில் வைத்துக்கொண்டே நீக்கும் வழியை காட்டியுள்ளது. ஏற்கனவே தம்புள்ள பள்ளியை இடம் மாற்றவது, ஹலால் நீக்கம் என பல உரிமைகளை முஸ்லிம்கள் இழந்து நிற்கும் நிலையில் 13வது திருத்தச்சட்டத்தில் திருத்தம் என்ற இடியும் மொத்த சிறுபான்மை மக்கள் தலையில் விழுந்துள்ளது.