BREAKING NEWS

முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கம் தொடர்ந்தும் புறக்கணித்து வருவதா

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கம் தொடர்ந்தும் புறக்கணித்து வருவதா நேற்று இடம்பெற்ற கட்சியின் உயர்பீட கூட்டத்தின்போது காரசாரமான விவாதம் இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினரும் மு.காவின் செயலாளருமான எம்.ரீ ஹஸன் அலி  தெரிவித்தார்.


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசின் அபிவிருத்தி திட்டங்கள், தொழில் வாய்ப்பு வழங்கள், அரச வளங்கள் பகிர்தந்தளித்தல் உட்பட பல விடயங்களின் போது முஸ்லிம் காங்கிரஸை அரசு ஓரங்கட்டப்படுவதாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியதாகவும், இதன் பின்னர் காராசாரமான வதங்கள் எழுந்தன எனவும் ஹஸன் அலி சுட்டிக் காட்டினார்.

அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்துள்ள ஏனைய கட்சிகளை அரசு சேவைகளின் போது இணைத்துக்கொள்கின்ற நிலையில், சகல விடயங்களிலும் அரசு முஸ்லிம் காங்கிரஸை வேற்றுக் கண்கொண்டு பார்ப்பதாக கட்சியின் உறுப்பினர்கள் காட்டமாக சாடி வருகின்றனர் எனவும் மு.கா. செயலாளர் குறிப்பிட்டார்.

இவ்வாறு அரசுடன் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள் காரணமாக மு.காவுக்குள் பிளவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றது. எனவே, நேற்றைய கூட்டத்தின் போது நாம் அரசாங்கத்தை சந்திக்க தீர்மாணித்துள்ளோம். கட்சியின் தலைவர் வெளிநாட்டுக்கு செல்கின்றமையால் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தலைமையில் அரசாங்கத்தை சந்திக்கவுள்ளோம் என ஹஸன் அலி தெரிவித்தார்.

இதேவேளை, அரசாங்கத்தை சந்திக்கும் தினம் தொடர்பில் இதுவரை முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

நேற்று இரவு நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் உயர்பீடம் கூடியது. இதன் போது பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத் தவிர்ந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். 

இதேவேளை பிரதியமைச்சர் பஷீர் சேகு தாவூத் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது தொலைபேசியினூடாக கட்சித் தலைமையோடு உரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் இறுதியாக கிழக்கு மாகாண சபை அமைப்பது தொடர்பில் கடந்த வருடம் அரசை சந்தித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
- See more at: http://www.importmirror.com/2013/06/blog-post_7905.html#sthash.nFSTpFrd.dpuf

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar