BREAKING NEWS

உலமாக்கள் தலைமையிலான அரசியல் கட்சியே இன்று தேவை


இலங்கை உலமாக்கள் பாராளுமன்றம் போக வேண்டும் என்பது அவர்கள் இந்த நாட்டில் இஸ்லாமிய சட்டத்தை கொண்டு வருவதற்கு என நினைப்பது பொதுபல சேனாவின் முட்டாள் சிந்தனை.
பாராளுமன்றத்துக்கு உலமாக்களை அனுப்பி வைப்பதன் மூலம் முஸ்லிம்களும் ஏனையவர்களும் உண்மையான அரசியலின் நன்மைகளை  பெற முடியும். இஸ்லாமிய அரசியல் என்றால் பலரின் கண் முன் வருவது இஸ்லாமிய குற்றவியல் தண்டனை சட்டம்தான். இதன் காரணமாகவே உலமாக்களின் அரசியல் என்றால் அச்சம் கொள்கிறார்கள்.
இஸ்லாமிய அரசியல் என்றால் உண்மை, நேர்மை, வாய்மை என்பதுதான். இதனை முன்னெடுக்க இந்த நாட்டின் அரசியல் சாசனம் இடம் கொடுத்துள்ளது. பட்டப்படிப்பு பெற்ற எந்தவொரு உலமாவும் பகிரங்கமாக மக்களை ஏமாற்ற முன்வர மாட்டார். அதனை நிஜ வாழ்விலும் நாம் காண்கிறோம். மௌலவி முடித்து பல்கலைக்கழக பட்டதாரியான எவரும் சமூக விடயத்தில் பகிரங்கமாக ஏமாற்றியதாக இலங்கையில் பதிவாகவில்லை. அத்துடன் சாதாரண முஸ்லிம் அரசியல்வாதி பகிரங்கமாக சாராயம் குடிப்பதையும், கூத்தடிப்பதையும் காணலாம். ஆனால் உலமாக்களை இவ்வாறு பகிரங்கமாக குற்றம் செய்பவர்களாக காண முடியவில்லை. தனிப்பட்ட குற்றங்கள் இறைவனை சார்ந்தவை.
ஆகவே மக்களுக்கு நன்மை தரும் அரசியல்வாதிகளை பெற வேண்டும் என்றால் உலமாக்கள் தலைமையிலான அரசியல் கட்சியே இன்று அவசியமான அவசாரமான தேவையாக உள்ளது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar