BREAKING NEWS

முஸ்லிம் மக்கள் கட்சி யின் ஆதரவு?


எதிர் வரும் மாகாண சபைத்தேர்தலில் முஸ்லிம் மக்கள் கட்சி போட்டியிடவுள்ளதான அறிவித்தலை தொடர்ந்து அதனை தவிர்த்து அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு ஆதரவளிக்கும்படி அவர் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக
கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

அதே வேளை ஐ தே கவுக்கு ஆதரவளிக்கும் படி அதன் முக்கியஸ்தர்கள்
வேண்டிக்கொண்டதாகவும், அதே போல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பிலிருந்தும் மிக முக்கிய ஒரவரால் வேண்டுகோள்  டுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் இவை அனைத்தையும் பற்றி தமது கட்சி மிக ஆழமாக ஆலோசனை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை முஸ்லிம் சமூகம் என்னதான் அரசுக்கு எதிரானது போல் தெரிந்தாலும் அரச கட்சிக்கோ அல்லது அரசில் பங்கு வகிக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கோ
வாக்களிக்கும் நிலையே காணப்படுகிறது. இவ்வாறு வாக்களிக்கப்படுமாயின் எத்தனை பள்ளிவாயல்கள் உடைந்தாலும் அரசாங்கத்துடன் சாhந்திருக்க வேண்டும் என்ற செய்தியையே முஸ்லிம் சமூகம் சொல்வதாக அர்த்தப்படும்.
இந்த வகையில் முஸ்லிம் சமூகத்தை உற்று நோக்கும் போது பெரும்பான்மையானோர் இன்னமும் அரசுக்கு – வெற்றிலைக்கும், மரத்துக்கும்- வாக்களிக்கக்கூடிய சூழ்நிலையே உள்ளதாக தெரிவித்த அவர் கூடிய விரைவில் தமது கட்சி இவை பற்றி தீர்மாணம் எடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar