BREAKING NEWS

பிறை விடயத்தில் ஏ சி அகார் முஹம்மதுக்கான பதில்

பிறையை கண்ணால் காண முடியாது என வானியல் கூறுவதை ஏற்று பிறை கண்ட சாட்சிகளை மறுக்க  முடியுமாயின் பிறையை கண்ணால் காண முடியும் என வானியல் கூறினால் அதனை மட்டும் மறுத்து பிறையை கண்ணால் காண வேண்டும் என கூறுவது முரண்பட்ட கருத்தாகும்.


வானியல் கூறுவது நூறு வீதம் உண்மையாயின் அதை அப்படியே ஏற்கலாமே. பிறையை கண்ணால் கண்டுதான் நோன்பை தீர்மாணிக்க வேண்டும் என நபிகளார் கூறவில்லை. மாறாக


பிறையை கண்டு பிடியுங்கள் என்றுதான் கூறியுள்ளார்கள். கண்ணால் என்பது தமிழில் வரும் இடைச்சொருகல். அறபியில் பிலஅய்ன். கண்ணால் என வரவில்லை. பி ருஃயத்திஹி என்றுதான் வந்துள்ளது. அதாவது காண்பது கொண்டு என்பதாகும். காணுதல் என்பது கண்களால் காணுவதை மட்டுமல்ல கருவியினால் காண்பதையும் குறிக்கும். அலம் தர கய்ப பஅல ரப்புக்க என இறைவன் கேட்கிறான். அதாவது யானைப்படைளை உமதிறைவன் என்ன செய்தான் என்பதை நீர் காணவில்லையா? என கேட்கிறான். இங்கு நபியவர்கள் யானைப்படைக்கு என்ன நேர்ந்தது என்பதை கண்ணால் கண்டார்களா? இல்லை. குர்ஆன் மூலம் காண்கிறார்கள். ஆக பிறை தென்படும் என்பதை வானியல் கருவி மூலம் சொல்லப்படடால் அதனை ஏற்க முடியும். அதே போல் பிறை உலகம் முழுவதும் ஒரே நாளில்தான் உதிக்கும். அப்பொழுது சில  நாடுகளில்; பகலாகவோ, இரவாகவோ இருக்கலாம் ஆனாலும் நாள் ஒன்றுதான்.
இன்னும் 200 வருடத்தில் வரும் சந்திர கிரகணம் பற்றி வானியல் கூறியுள்ளது போல் இன்னும் 200 வருடங்களில் வரும் நோன்பு எப்போது ஆரம்பிக்கிறது என்பதை மக்காவில் உள்ள உம்முல்குறா கலண்டர் கூறுகிறது. இதை ஏன் முஸ்லிம்களால் ஏற்க முடியாதுள்ளது? இந்தக்கலண்டர் நபியவர்கள் காலத்தில் உருவாக்கப்படவில்லை. மாறாக அவர்களுக்குப்பின் வானியல் அறிவு வளர்ந்த பின் கண்டு பிடிக்கப்பட்டது. அதன் படி மக்கா பிறையை ஏற்போமானால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

சுருக்கமாக சொல்லப்போனால் முஸ்லிம் உலகம் பிறை விடயத்தில் முற்காலங்கள் போல் ஒன்றில் வானியலை முற்றாக நிராகரித்து பிறையை காண்பதற்கு வரவேண்டும், அல்லது பிறையை கண்ணால் காண்பது என்பதை மறுத்து வானியலை ஏற்க வேண்டும். பிறை தெரியாது என்பதில் வானியலை நம்புவதும், பிறை தெரியும் என்பதில் வானியலை மறுப்பதும்; முரண்பட்ட நிலையாகும்.
மாதங்கள் எவ்வாறு இருக்கும் என்பதற்கு நபிகளார் தமது கைகளினால் 29 என்றும் 30 என்றும் காட்டினார்களே தவிர ஒவ்வொரு மாதமும் பிறையை பார்த்து மாதத்தை அறிந்து கொள்ளுங்கள் என சொல்லவில்லை. அத்துடன் அவர்கள் தமது  கைகளால் காட்டு முன் நாம் எழுதத்தெரியாத கணக்கு தெரியாத சமூகம் எனக்கூறியதன் மூலம் எழுதத்தெரிந்த , கணக்கு பார்க்க தெரிந்த சமூகத்துக்கு வெறும் ய+கத்தின் அடிப்படையிலான மாதங்கள் சரிவராது என நபிகளார் தெளிவு படுத்தியுள்ளார்கள். இன்றிருப்பது எழுதப்படிக்க உலகின் எங்கோ ஓர் மூலையில் பிறை தென்பட்டாலும் அதனை அடுத்த விநாடியே அறிந்து கொள்ளும் வசதி பெற்ற சமூகம்.
அது மட்டுமல்ல நபிகளாhரும், அதற்குப்பின் சஹாபாக்களும் தொழுகை நேரங்களை இன்று போல் கடிகாரா நேரத்தின் படி தீர்மானிக்கவில்லை. சூரியன் உச்சிக்கு வருதல் மறைதல் வெள்ளைப்பிரமானம் தெரிதல் என்பவற்றை வைத்துத்தான் தொழுதார்கள். இப்போதும் அப்படி செய்கின்றோமா? தொழுகைக்கு சூரியனை பார்க்க நபியவர்கள் சொன்னதை மறுத்து நேர கணக்கீட்டை பாhக்கும் நாம் நோன்புக்கு பிறையை பார்க்கச்சொன்ன விடயத்தில் மட்டும் பிறையை கணக்கின் படி பார்க்க முடியாது என்கிறோம். ஏன் இந்த முரண்பாடு? ளுஹர் 12.10 அல்லது 20 என்பதெல்லாம் வானியல் அறிஞர்களின் கணிப்பீட்டு முறைதான். ஆக நாம் என் மக்கா பிறையை கனித்தல் என்பதன் மூலம் கண்டு நமது மாதங்களை தீர்மாணிக்க முடியாது?

-முபாறக் அப்துல் மஜீத்

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar