போராளிகளே புறப்படுங்கள்
ஒய்வெடுக்க நேரமில்லை
என்றார் மகான் அஷ்ரப்
இதோ
போராளிகள்
புறப்பட்டு விட்டார்கள்
மக்களை கொள்ளையடிக்கவும்
அவர்களை ஏமாற்றவுமாய்
ஓய்வு ஒளிச்சல் இன்றி
போராளிகள் புறப்பட்டு விட்டார்கள்.
அஷ்ரபை அடக்கியதுதான் தாமதம்
ஆளுக்கொரு கூட்டமாய்
சமூகத்தை ஏமாற்ற
போராளிகள்
புறப்பட்டு விட்டார்கள்
அதாவுள்ளா எதையும்
சுருட்டுவதற்கு முன்னால்
நாம் சுருட்ட வேண்டும்
ரிசாத் சுருட்டுவதை
தட்டிப்
பறிக்க வேண்டும்
என்பதற்காய்
போராளிகள் உடனடியாகவே
புறப்பட்டு விட்டார்கள்.
இனவாதிகளை கண்டிப்போம்
என போராளிகள்
அறிக்கை விடுகிறார்கள்
இனவாதிகளுக்கு
மாகாண சபையிலும்
பாராளுமன்றத்திலும்
முட்டுக்கொத்து
தமது சாக்குகளை நிரப்ப
இதோ
போராளிகள் எப்போதோ
புறப்பட்டு விட்டார்கள்
அடுத்த தேர்தல்
வந்தால்
எப்படி மக்களை
ஏமாற்றுவது என
திட்டம் போட
மக்களை ஏமாற்றுவது தவிர
வேறு ஏதும் தெரியாத
போராளிகள்
இதோ
இப்போதே
புறப்பட்டு விட்டார்கள்.
-முபாறக் அப்துல் மஜீத்
