BREAKING NEWS

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் விஜயம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ  (14)சனிக்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் செய்ததுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலும் ஜனாதிபதி பங்கேற்றார்.


.இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சுயேட்சைக்குழுக்களில் பங்கெடுத்திருந்த 6 பேர் இன்றைய தினம் மஹிந்த முன்னிலையில் ஆளும்கட்சியில் இணைந்து கொண்டனர். இதன்போது அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தாஇ சுசில் பிரேம ஜயந்தஇ பாவித்திரா வன்னியராட்சிஇ றெஜினோல்ட் கூரேஇ பாராளுமன்ற உறுப்பினர்களான சில்வேஸ்திரி அலென்ரின் இ அஸ்வர் ஆகியோரும் உடனிருந்தனர்.


அத்துடன்இ சுன்னாகத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் நிர்மானிக்கப்பட்ட கிளிநொச்சி சுன்னாகம் தேசிய மின் இணைப்பு நிலையத்தை திறந்துவைத்துள்ளார்.
அங்கு எடுக்கப்பட்ட பிரத்தியேக படங்கள் சில....(பாறூக் சிகான்)

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar