BREAKING NEWS

வடக்கில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை குறைத்தது மு.கா- அ.இ.மு.கா.


நடைபெற்று முடிந்த வட மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இவற்றுள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 3 ஆசனங்களையும்இ ஈ.பி.டி.பி. 2 ஆசனங்களையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி 2 ஆசனங்களையும் பெற்றுள்ளது.


அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் 3 ஆசனங்களும் மன்னார் முல்லைத்தீவுஇ வவுனியா ஆகிய மாவட்டங்களில் பெறப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் றிப்கான் பதியுதீனும்இ முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனுாபரும்இ வவுனியா மாவட்டத்தில் ஜயதிலக்க என்பவரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் புத்தளத்தில் உள்ள இடம்பெயர்ந்த வாக்காளர்கள் சிறிய சிறிய காரணங்களுக்காக தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடிகளின் காரணமாக வாக்களிப்பிலிருந்து தடுக்கப்பட்டிருக்கின்றார்கள். தேசிய அடையாள அட்டைகளில் இரண்டொரு எழுத்துக்கள் தெளிவில்லாமல் இருந்தாலும் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவில்லை. இதனால் கணிசமான வாக்குகளை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இழந்தது. இதன் காரணமாக வெறும் 67 வாக்குகளால் மன்னார் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இழந்தது என்று அக்கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக அவர் தொடர்ந்தும் குறிப்பிடும்போதுஇ

வவுனியா மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டதன் காரணமாக சுமார் 2000 வாக்குகளைப்பிரித்ததனால் அங்கு ஒரு முஸ்லிம் தெரிவு செய்யப்படுவது தடுக்கப்பட்டது. இருப்பினும் வவுனியா மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இரு வேட்பாளர்களுள் தர்மபால என்ற வேட்பாளர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சார்பிலும் ஜயதிலக்க என்பவர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதன்மூலம் எந்தவொரு ஆசனத்தையும் பெற முடியாது. அதேநேரம் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒரு முஸ்லிம் தெரிவுசெய்யப்படுவதைத் தடுப்பதற்கே அவ்வாக்குகள் பயன்படுத்தப்படும் என்று நாம் தேர்தல் மேடைகளில் கூறியது நிதர்சனப்படுத்தப்பட்டிருக்கிறது.

தனித்து ஒரு கட்சியில் முழுக்க முழுக்க முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துகின்றபொழுது குடும்பம்இ உறவுக்காரர்கள் என வாக்குகள் பிரிக்கப்படுவது இயற்கையாகும். எனவே தன்னுடைய இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை. எதிரியின் ஒரு கண்ணாவது போகவேண்டும் என்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இலக்கு வெற்றியடைந்துள்ளது. ஆனாலும் வவுனியா மாவட்ட முஸ்லிம்கள் தோல்வியடைந்துள்ளார்கள். அடுத்த 5 வருடங்கள் வட மாகாண சபையில் வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒலிப்பதற்கு ஒரு முஸ்லிம் குரலை இல்லாமல் செய்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அதற்குத் துணைபோன வாக்காளர்கள் நன்றி தெரிவிக்கட்டும்.
வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாகவோ அல்லது அவர்களின் எதுவித நலன்கள் தொடர்பாகவோ ஏறெடுத்தும் பார்க்காத ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் காலத்தில் மாத்திரம் வடக்கு முஸ்லிம்களின் வாக்குகளைப்பிரிப்பதற்காக வேட்பாளர்களின் குடும்ப மற்றும் உறவினர்களின் வாக்குகளை நம்பி களம் இறங்குவதும் அம்மக்களுக்கு இவ்வாறு அநியாயம் செய்வதும் தொடர்கதையாகிவிட்டது.

கடந்த உள்ளுராட்சி சபைத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து களம் இறங்கியதன் காரணமாக ஒரு சில 100 வாக்குகளால் மன்னார் நகர சபையையும்இ வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம் பிரதேச சபையையும் முஸ்லிம்கள் கைப்பற்றுவதைத்தடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அவற்றை தாரைவார்க்க உதவியது. அதன் பின்பு வட பகுதிப்பக்கம் திரும்பியே பார்க்காத ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை வவுனியா மாவட்டத்தில் மாகாண சபையில் ஒரு முஸ்லிம் குரல் இருக்கக்கூடாது என்பதை உறுதிசெய்துவிட்டது. அக்கட்சிக்கு வாக்களித்த முஸ்லிம்கள் தமது குரலை இல்லாமல் செய்ததற்காக அக்கட்சியின் தலைமையை பாராட்டித்தான் ஆக வேண்டும்.

தேர்தல் முடிவடைந்துவிட்டது. வடபகுதி முஸ்லிம்கள் கவலைப்படத்தேவையில்லை. வட பகுதி முஸ்லிம்களுக்காகப் போராடுவதற்கும் அதற்குப்பகரமாக வடக்கு இனவாதிகளின் இழி சொற்களையும் அவர்களால் கொடுக்கப்படும் இன்னல்களையும் தாங்கிக்கொள்வதற்கு அமைச்சர் றிஸாட் பதியுதின் இருக்கின்றார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் அவ்வினவாதிகளுடன் கைகோர்க்கும் அடுத்த தேர்தலில் வட மாகாண முஸ்லிம்களை திரும்பிப்பார்க்கும்வரைஇ என்றும் குறிப்பிட்ட அவர்இ அதேநேரம் இனவாத நெருக்குதல்களுக்கும்இ இனத்துவேச பிரச்சாரங்களுக்கும்இ இருபக்க சதித்திட்டங்களுக்கும் மத்தியில் எமக்கு வாக்களித்த மன்னார்இ முல்லைத்தீவுஇ வவுனியா மாவட்ட முஸ்லிம்இ தமிழ்இ சிங்கள வாக்காளர்களுக்கு கட்சியின் சார்பில் தமது நன்றிகளைத் தெரிவிப்பதோடுஇ கட்சியின் வெற்றிக்காக இத்தேர்தலில் உழைத்த கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள்இ உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள்இ பாராளுமன்ற உறுப்பினர்கள்இ மாகாண சபை உறுப்பினர்கள்இ உள்ளுராட்சி சபைத்தலைவர்கள்இ அமைப்பாளர்கள் மற்றும் கட்சியின் போராளிகளுக்கும் கட்சியின் சார்பில் நன்றிகளைத்தெரிவிப்பதாகவும் மேலும் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.
( எஸ்.அஷ்ரப்கான் )

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar