என்னைப்பற்றி சரியான அறிவில்லாமல் தனிப்பட்ட ரீதியில் அறிக்கை விட்ட அமைச்சரின் பிச்சைக்கு நன்றி சொல்லும் லத்தீப் என்பவர் என்னைப்பற்றி பொய்யாக எழுதியுள்ளதன் காரணமாக இதனை நான் எழுத வேண்டியுள்ளது.
பொதுவாக சரியான தெளிவின்றி முட்டாள்கள் விவாதிக்க வந்தால் சலாமத்தாக ஒதுங்கி விடும் படி இஸ்லாம் சொல்வதால் பேசாமல் விடுவோம் என நினைத்தேன். ஆனால் பல பொய்யான குற்றச்சாட்டுக்களை இவர் முன் வைத்துள்ளதால் எனது மௌனம் சம்மதத்துக்கு அறிகுறியாகிவிடும் என்பதால் இவர்களுக்கெல்லாம் பதில் தர வேண்டியுள்ளது. ஆனாலும் இதில் எனக்குள்ள நலவு என்னவென்றால் இப்படித்தான் சிலர் என்னைப்பற்றி பொய்யாக கற்பனை பண்ணிக்கொண்டிருக்கலாம் என்பதால் இதற்கு பதில் தருவது நல்லது என நினைக்கிறேன்.
எமது கட்சி கடிதத்தலைப்பில் மட்டும் இயங்கி வருகிறது என்ற இவரது குற்றச்சாட்டுக்கு எமது கட்சியின் உப தலைவர் தெளிவாக பதில் தந்திருந்தார். அந்த பதிலில் இவர்களது கட்சியின் வாப்பா ஒரு தமிழர் என்றும் காசு கொடுத்து அதனை வாங்கி அதற்கு இவர்கள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என பெயர் சூட்டியதன் மூலம் அது ஒரு ஹறாங்குட்டி கட்சி என்ற உண்மையையும் தெளிவு படுத்;தியிருந்தார். இதனால் கடுப்பாகி பதில் தரும் இவர் விலை மாதர்கள் வசை பாடுவது போன்று எமது பதில் உள்ளதாக கூறியுள்ளார். விலை மாதர்களின் இணைப்பாளராகவும் இவர் இருக்கிறாரோ தெரியவில்லை அதனால்தான் விலை மாதர்கள் பற்றிய இவரது அனுபவத்தை கூறியுள்ளார். வசை பாடுவது என்பது பொய்யாக குற்றச்சாட்டு வைப்பதாகும். நாம் உண்மையை கூறினோம். அவற்றுக்கு பதில் தராமல் பொய்களை அவிழ்த்து விட்டுள்ளார்.
ஓர் அமைச்சரின் அதிகாரியாய் இருப்பது பிச்சை என்றால் சஊதி அரசாங்கம் மாதாந்தம் போடும் பிச்சையில் நான் வாழ்வதாக இவர் குறிப்பிட்டுள்ளார். ஏன்தான் கொஞ்சமும் இறைவனுக்கு அஞ்சாமல் இவ்வாறு பச்சை பொய் சொல்கிறாரோ தெரியவில்லை. நான் இவருக்கு சவால் விடுக்கின்றேன், நான் சஊதியிலிருந்து மாதா மாதம் பணம் பெறுவதாக இவரால் நிரூபிக்க முடியுமா என்று. இதனை சஊதி தூதுவராலயத்திடம் கேட்டு இவரால் நிரூபிக்க முடியுமா? முடியாது போனால் இவர்; ஒரு பொய்யன் என்பதை இவர் ஏற்றுக்கொள்கிறார்.
சஊதியால் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பணவு எனக்கு வேண்டாம் என்றும் நான் சுதந்திரமாக செயற்பட விரும்புகிறேன் என்றும் கூறிய ஒரேயொருவன் நான் மட்டுமே. அதனால்த்தான் என்னால் தைரியமாக இன்று அரசியல் செய்ய முடிகின்றது. சஊதி பணம் பெறுபவர்கள் எக்காரணம் கொண்டும் அரசியலில் ஈடு பட முடியாது என்ற கட்டாய நிபந்தனை உள்ளது என்பது இவருக்கு தெரியாது என்பதில் நியாயமுண்டு.
அத்தோடு யாரும் சஊதியின் காசை பெற்றாலும் அது பிச்சை அல்ல. அவர்கள் காசு கொடுப்பது மதுரசா போன்றவற்றில் படித்துக்கொடுப்பதற்குரிய ‘சதாகா’வாகவாகும். மாறாக அமைச்சரின் பிச்சையை பெற்றுக்கொண்டு ஊருக்கும் எதுவும் செய்யாமல் மக்களை ஏமாற்றி கொமிசன்களை அடித்துக்கொண்டு வாழ்வது போன்ற கேவலமானதல்ல. சஊதி காசு பெறுவது நமது அரசாங்கத்தின் ஆசிரியர் தொழிலுக்கு வேதனம் பெறுவது போன்றதாகும் அரசாங்க தொழில் செய்பவரை நாம் பிச்சை பெறுகிறார் என சொல்வதில்லை. இவரோ தனது பிச்சைக்காக எம்மை விமர்சித்து நன்றி செலுத்துகிறார்.
எனக்கு ஜனாதிபதி பதவியை அமைச்சர்கள் பெற்றுத்தரவில்லை என்பதற்காக நான் அவர்கள் மீது ஆத்திரமாக உள்ளதாக இவர் கூறுகிறார். எனக்கு ஜனாதிபதி ஆலோசகர் பதவியை பெற்றுத்தாருங்கள் என எந்த அமைச்சரிடமாவது நான் கேட்டேனா என்பதை நிரூபிக்க முடியுமா என்பது எனது அடுத்த சவால்.
எந்தவொரு முஸ்லிம் அமைச்சரின் உதவியின்றி 2005ம் ஆண்டு நாம் எமது கட்சியை ஜனாதிபதிக்கு ஆதரவாக இறக்கி அவர் அருகில் இருந்தேன். நாம் கடிதத்தலைப்பு கட்சி என்றால் அத்தகைய ஒரு கட்சியைத்தான் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பன் தோழமை கட்சியாக ஜனாதிபதி ஏற்றிருந்தாரா? ஜனாதிபதியின் அமைச்சரிடம் சம்பளம் பெற்றுக்கொண்டே ஜனாதிபதியை இவர் அறிவற்றவர் என கூற வருகிறாரா?
2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு முன் நான் அலவி மௌலானாவையோ அமைச்சர் பௌசியையோ, அஸ்வரையோ, ரிசாதையோ ஒரு போதும் நேரில் சந்தித்ததில்லை. அவர்கள் நேரில் எப்படி இருப்பார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது. அந்தளவுக்கு அரசியல்வாதிகளை புறந்தள்ளி தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தவன் நான். அத்துடன் முஸ்லிம் காங்கிரசின் இணைப்பாளராக 1989ம் ஆண்டு முதல் இயங்கி அக்கட்சிக்காக பாடு பட்ட நான் பதவி ஆiசை இருந்திருந்தால் மறைந்த தலைவர் அஸ்ரபிடம் போயிருக்க முடியும். ஆனால் அவர் 1994ல் அமைச்சரானது முதல் அவர் மரணிக்கும் வரை அவரை நேரடியாக சந்திக்காத ஒரேயொரு மு. கா இணைப்பாளன் நான்தான். கட்சி மக்களுக்கு செNவை செய்ய வேண்டும் என்றே நான் விரம்பினேனே தவிர சிலருக்கல்ல. இதனால் நான் தலைவரை விமர்சித்ததன் காரணமாக தன்னை வந்து சந்திக்கும்படி அமைச்சர் அஸ்ரப் எனக்கு தகவல் அனுப்பிய போது நான் வரமாட்டேன் என்றும் அவர் விரும்பினால் கல்முனைக்கு வரும் போது எனது வீட்டுக்கு வந்து அவர் என்னை சந்திக்கலாம் எனவும் தைரியமாக கூறியவன் நான். ஆதாரம் தேவை என்றால் கல்முனை மசூத் மாஸ்டரிடம் கேளுங்கள். அந்தளவுக்கு அமைச்சர்களை துட்சமாக நினைப்பவன் நான்.
இவர்கள் எவரின் உதவியும் இன்றி இறை நாட்டப்படி எமது கட்சியை பலப்படுத்தி ஜனாதிபதியை நெருங்கிய எனக்கு ஜனாதிபதி ஆலோசகர் பதவி பெறுவது என்பது ஜுஜுபி. எனக்கு எந்த பதவியும் வேண்டாம் சமூகத்துக்கான எமது கோரிக்கையை நிறைவேற்றி தாருங்கள் என 2005 தேர்தல் வெற்றியின் பின் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் தெரிவித்த ஒரேயொரு முஸ்லிம் கட்சித் தலைவன் நானே. அல்ஹம்துலில்லாஹ். இதனை ஜனாதிபதி 2008ம் ஆண்டு மஹரகமையில் நடந்த பெருங்கூட்டத்தில் என்னை சுட்டிக்காட்டி தெரிவித்தார். ஆதாரம் அலவி மௌலானா, அஸ்வர், அமீர் அலி.
மலேசியாவுக்கு ஏன் என்னையும் அழைத்துச்செல்லவில்லை என நான் ரஊப் ஹக்கீமுக்கு அறிக்கை விட்டதாக இந்த அறை குறை புலம்பியுள்ளார். அப்படி ஒரு அறிக்கையை நான் எழதியதாக காட்டினால் நான் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் என அடுத்த சவால் விடுகிறேன். நான் மலேசியாவில் இலக்கிய மாநாடு நடப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்னர் மலேசியா சுற்றுலா போய் வந்ததாலேயே இலக்கிய மாநாட்டுக்கு செல்லவில்லை. இலக்கிய மாநாட்டை கட்சி அரசியலாக்கியதைத்தான் நான் வன்மையாக கண்டித்திருந்தேன்.
இந்த அரசாங்கத்தின் இனவாத செயற்பாடுகளை கண்டித்து இவரது கட்சியினர் ஊடக மாநாடு நடத்தினால் நானும் அதில் கலந்து கொள்ள தயார் என குறிப்பிட்டது இவர்களுக்கு அரசை எதிர்த்து பேச பயம் என்பதால் நான் பேசுவேன் என்பதற்காகத்தான். மற்றபடி நமது முகத்தை நன்றாகவே தொலைக்காட்சியில் காட்டி அது நமக்கு அலுத்து விட்டது. தொலைக்காட்சியில் முகத்தை காட்ட வேண்டும் என்ற தேவை இருந்தால் அரசுக்கு ஆதரவாக இருந்தால் போதும். ஒவ்வொரு வாரம் எனது பேட்டியை ஒளிபரப்புவார்கள். ஒளி பரப்பினார்கள் என்பது பலருக்கும் தெரியும். இந்த மாகாண சபை தேர்தலின் போதும் கூட அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனக்கு ஆதரவாக வரும்படி என்னை அழைத்த போது பள்ளியை உடைக்கும் வெற்றிலைக்கு ஆதரவு வழங்குவது என்பது எனக்கு வயிற்றை குமட்டுவது போல் உள்ளது என்று ஒதுங்கினேன். அவருக்கு ஆதரவு என்று ஒரு வார்த்தை கூறியிருந்தால் போதும் அரச தொலைக்காட்சிகள் எனக்குப் பின்னால் படையெடுத்திருக்கும்.
திருகோணமலையில் நவிப்பிள்ளையை சிவில் பிரதிநிதிகளாக இவர்களை சந்திக்க நாம் சொல்லவில்லை. ஓர் அமைச்சராகத்தான் போகச்சொல்லியிருந்தேன். சிவில் சந்திப்பில் அமைச்சர் அமைச்சராக கலந்து கொள்ள முடியும் என்பது அமைச்சரின் பிச்சைக்கு தெரியாது. எம்மிடம் சொந்த வாகனம் உண்டு. ஆனாலும் அரச வாகனம் இல்லை என்பதைத்தான் நாம் கூறி இலவச பெற்றோலிலேயே இவர்கள் சென்றிருக்கலாமே என்றுதான் கூறினோம். அரைகுறை அரைகுறையாக விளங்கியதற்கு நாம் தவறல்ல.
ஆளுனர் அலவி, அஸ்வர் போன்றோரின் நிகழ்ச்சிகள் எந்த ஊரில் நடந்தாலும் நான் அலைந்ததாக சொல்லியுள்ளார். எனது வாழ்வில் அலவி மௌலானாவை சந்தித்ததே 2006ம் ஆண்டுதான். நான் அரசுக்கு ஆதரவான ஒரு கட்சியின் தலைவர் என்பதால் கூட்டங்களில் கலந்து கொள்ளும்படி எனக்கு அழைப்பு விடுத்தனால்த்தான் அவர்களுடன் அவர்களின் வாகனத்தில் சென்றுள்ளேன். நான் ஒரு போதும் தானாக சென்றதேயில்லை. அவர்களுக்கு நான் தேவை என்பதால் என்னை பிரயோஜனப்படுத்திக்கொண்டார்கள் என்பது எனது எதிரிக்கும் தெரியும்.
ஐ தே க மாகாண சபையை கைப்பற்றினால் ஆலோசனை பதவி கிடைக்கும் என்று நான் எதிர் பாhத்தேனாம். இது இவரது கற்பனை. முதலில் ஐ தே க மாகாண சபையை கைப்பற்றும் என்று இவர்தான் எண்ணியிருப்பார். நான் எதிர் பார்ப்பது பள்ளிவாயல்களை உடைக்கும் இந்த அரசாங்கத்தை முஸ்லிம்கள் எதிர்ப்பது என்றால் ஐ தே கவுக்கு வாக்களிப்பதன் மூலமே முடியும் என்ற செய்தியைத்தான். இதை சொல்ல நான் எனது செலவில் புத்தளம் சென்றேன்.
இவர் போன்ற புரியாத மடையன்களுக்கு நாம் எழுதுவது எதுவுமே புரியாது என்பதைத்தான் இவரது எழுத்து காட்டுகிறது என்பதை சஊதி மாதாந்த பணம், அமைச்சர்களிடம் நான் பதவி பெற்றுத்தர சொன்னதான கற்பனை குற்றச்சாட்டு என்பவற்றின் மூலம் தெரிகிறது. பேயன் பலாப்பழத்தை பார்த்ததை போன்று இவர் என்னை பார்த்துள்ளார்.
ஹசன் மௌலானாவுக்கு ஜனாதிபதியின் முஸ்லிம் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டதுதான் எனக்கு பிரச்சினை என இவர் கூறியுள்ளார். முதலில் ஹசன் மௌலானாவுக்கு ஜனாதிபதி ஆலோசகர் பதவி வழங்கப்பட்டவில்லை என்பது கூட இவருக்கத்தெரியாது. இந்த லட்சணத்தில் அமைச்சரின் இணைப்பாளராம். வெட்கக்கேடு. இப்படிப்பட்ட மூடர்களை இணைப்பாளராக கொண்டதனால்தான் அமைச்சர் ரிசாத் மாகாண சபை தேர்தலில் மன்னாரில் வாங்கி கட்டியுள்ளார். நான்காயிரத்துக்கு மேற்பட்டோர் மு. காவுக்கு வாக்களித்தது மு. காவின் மீதான பற்றினால் அல்ல மாறாக ரிசாத் மீதான ஆத்திரத்தில். ரிசாத் நல்ல மனிதர். ஆனால் அவரை சூழவுள்ளவர்கள் பெரும்பாலும் இந்த லத்தீப் போன்ற அரசியல் தெரியாத அரை வேட்காடுகள். இதனால்த்தான் ஹசன் மௌலான ஜனாதிபதியின் ஆலோசகர் என கூறுகிறார். அவர் ஜனாதிபதியின் இணைப்பாளரின் இணைப்பாளர். ஜனாதிபதியின் இணைப்பாளருமல்ல. இதுகூட தெரியாத ஒருவர் இணைப்பாராக இருப்பது அமைச்சர் ரிசாதுக்கே அவமானம்.
நான் கடித தலைப்பை வைத்துக்கொண்டு கட்சி செய்வதாக சொல்லியுள்ளார், கடித தலைப்பே இல்லாத இந்த ஹறாங்குட்டி கட்சிக்காரர். கடித தலைப்பு என்பது ஒரு மனிதனுக்கு இருக்கும் பெயர் பதிவு போன்றது. இவர்களது கட்சிக்கு என்ன பெயர் என்பதே இவர்களுக்கு தெரியாது.
மறைந்த தலைவர் அஸ்ரப் கூட 81ம் ஆண்டு முதல் 88 வரை கடித தலைப்பை மட்டும் வைத்துக்கொண்டுதான் கட்சி செய்தார். 88ம்ஆண்டு கட்சியை பதிவு செய்வதற்காக 5000 அங்கத்தவர்கள் தேவை என்பதால் அது கூட இல்லாமல் மௌத்தானவர்கள்; பெயர்களில் அங்கத்துவம் நிரப்பப்பட்டு அவை பழையவை என்பதைக்காட்ட புழுதியில் போட்டு புரட்டி எடுத்த செய்தியெல்லாம் இ;ன்றைய நிகழ்வான ஹசன் மௌலானா ஜனாதிபதி ஆலோசகரா என்பதே தெரியாத இவருக்கு அன்றைய செய்திகள் எங்கே தெரியப்போகிறது? தேவையாயின் அன்று அஸ்ரபுடன் இருந்த கல்முனை சட்டத்தரணி நிசாரிடம் கேட்டுப்பார்த்து தெரிந்து கொள்ளட்டும்.
இவர்களது கட்சியில் நான் சேர்ந்த போது பாராட்டியதாகவும், இப்போது தூற்றுவதாகவும் இவர் கூறுகிறார். அமைச்சர் ரிசாத், வை எல் எஸ் போன்றோர் ஹக்கீமுடன் நக்கிக்கொண்டிருந்த போது அவரை புகழ்ந்ததையும், பிரிந்த பின் இகழ்வதையும் இவர் மறந்து விட்டார். நானாக இவர்களின் சேரவில்லை. எனது நல்ல நண்பர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைர் சமூக நலனுக்காக ஒன்றிணைந்து செயற்பட வாருங்கள் என தினமும் அழைப்பு விடுத்தார். அதனால் கட்சிகளின் ஒற்றுமைப்பட்ட சமூக செயற்பாட்டுக்காக இணைந்து செயற்பட்டேன். அப்போதும் கூட இவர்களின் கட்சி மூலம் ஒரு சதம் பணம் பெறாமல் கட்சிக்காக உழைத்தேன். பின்னர்தான் தெரிந்தது இவர்களும் முஸ்லிம் காங்கிரஸ் போல் சமூகத்தை ஏமாற்றி பிழைப்பவர்கள் என்பதும் இவர்களின் சொந்த பிழைப்புக்காகவே கட்சி நடத்துகிறார்கள் என்பதும். தலைமைக்குரிய ஆளுமை இல்லாத தலைமை, அரசியல் தெரியாத முட்டாள் செயலாளர் என்பதும் அரசு தம்புள்ளை பள்ளியில் கைவைத்த போது அதனை தடுக்க முடியாமல் விலை போனமையையும் பார்த்த பின்னர் இவர்களது கட்சியிலிருந்து நான் ராஜினாமா செய்தேன். இவற்றை நான் இதுவரை யாரிடமும் சொல்லவேயில்லை. காரணம் கூட இருந்து விட்டு இவற்றை பகிரங்கப்படுத்துவது நல்லதல்ல என்பதால். இந்த அரைகுறை தான் என்னை இவை பற்றி பேச வைத்துள்ளார்.
பொதுவாக ஒருவர் நல்லவர் என நினைத்து இணைந்து செயற்படுவது மனித பண்பாகும். கெட்டவர்கள் என தெரிந்த பின்பும் ஒட்டியிருப்பதுதான் தவறானதாகும்.
நான் ஒரு காலத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை போற்றியதில்லை. விமர்சனம் எனும் போது நல்லவற்றை பாராட்டி மோசமானவற்றை கண்டித்துள்ளேன். அண்மையில் கூட த. கூட்டமைப்பின் சின்னத்தில் முஸ்லிம்கள் இணைந்து போட்டியிடும் அளவு த. கூட்டமைப்பு இன்னமும் பக்குவப்படவி;லை என்று கூறியிருந்தேன். இது வெல்லாம் அரை குறை பார்வை உள்ள இவருக்கு புரியாது. எவரையும் புகழ்பாடிக்கொண்டே இருப்பது அல்லது தூற்றிக்கொண்டே இருப்பதூன் இவர்களை போன்றவர்களுக்கு வேலை. ஆனால் நான் சிலரை பாராட்டியுள்ளேன் என்பதை இவரே ஏற்றுக்கொண்டுள்ளதன் மூலம் நான் நல்லதை பாராட்டுவேன் தீயதை எதிர்ப்பேன் என்பது தெளிவாகியுள்ளது. இந்த ஜனாதிபதி புலிகளை ஒழித்ததை மனமார பாராட்டினேன். பள்ளிவாயல்களை உடைத்ததை கடுமையாக முதலில் இருந்தே கண்டித்தவன் நான் என்பது நாட்டு நடப்பு தெரிந்தவர்களுக்கு தெரியும்.
ஆக, இவர் தனக்கு பிச்சை போடும் அமைச்சருக்கு ஆதரவாக பொய்களை கொட்டியுள்ளார். இவர் உண்மையானவராக இருந்தால் நான் இதில் விடுத்துள்ள சவால்களுக்கு ஆதாரப+ர்வமாக பதில் தரட்டும். அப்படிச்செய்யாமல் இன்னும் சில் பொய்களை அவிழ்த்து விடுவார் என்பது மட்டும் உண்மை.
-முபாறக் அப்துல் மஜீத்