BREAKING NEWS

14ந்திகதி அறபா நோன்பு நோக்கும்படி அகில இலங்கை உலமா கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.

ஹாஜிகள் எதிர் வரும் 14ந்திகதி அறபாவில் கூடுவதால் அறபா நாளான அந்நாளில் நபிகளாரின் மொழிக்கேற்ப முஸ்லிம்கள் நோன்பு நோக்கும்படி அகில இலங்கை உலமா கவுன்சில் உலகளாவிய முஸ்லிம்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இது பற்றி உலமா கவுன்சில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

அறபா நாள் என குறிப்பிடப்படுவது ஹாஜிகள் அறபாவில் ஒன்று கூடும் தினமாகும். இத்தினம் மக்காவில் காணும் துல்ஹஜ் மாத தலைப்பிறையை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. தொழில் நுட்ப சாதனங்கள் கண்டு பிடிக்க முடியாத முற்காலத்தில் மக்காவுக்கு ஒருவரை அனுப்பி பிறை காணப்பட்ட செய்தியை கொண்டு வருதல் என்பது சாத்தியமற்ற ஒன்றாக இருந்ததால் அக்காலத்து முஸ்லிம்கள் தமது பிரதேசங்களில் காணும் பிறையை வைத்தே இந்நாள் அறபா நாளாக இருக்கலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் நோன்பு நோற்று வந்தனர். இது அன்றைய காலத்தை பொறுத்த வரை தவறானதல்ல.

      ஆனால் அறபா நாள் என்பது இந்நாள்தான் என தற்காலத்தில் நூறு வீதம் தெரிந்த பின்னரும் தத்தமது நாடுகளில் வேறொரு நாளை அரபா நாளாக கருதுவது  இஸ்லாத்தை கொச்சைப்படுத்துவதாகவும் அறபா நாளில் நோன்பு என்பதும் இல்லாமல் போய் விடுகிறது. நபி (ஸல்) அவர்கள் அறபா நாளில் நோன்பு வைக்கச்சொன்னர்களே தவிர ஒவ்வொரு நாட்டிலும் காணும் பிறையை வைத்து அரபா நாட்களை உருவாக்கிக்கொள்ளும்படி கூறியதாக ஒரு ஹதீதும் இல்லை.

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுங்கள் என்றால்; முழு உலக மக்களுமே வெள்ளிக்கிழமைதான் ஜும்ஆ தொழுவார்கள். அதே போல் அறபா நாளில் நோன்பு வையுங்கள் என்றால் அறபாவில் ஹாஜிகள் வருடத்தில் ஒரேயொரு நாள் ஒன்று கூடும் அந்த அரபா நாளில்தான் ஏனைய முஸ்லிம்கள் நோன்பு நோற்க வேண்டும் என்பது நபிகளாரின் வார்த்தை மூலம் மிகத்தெளிவாக தெரிகிறது.

இஸ்லாம் எந்த நாட்டுக்கும் சூழலுக்கும் ஏற்ற மார்க்கம் என்பதால் மக்காவில் ஹாஜிகள் அறபாவில் ஒன்று கூடும் தினத்தில் இலங்கை முதல் அமெரிக்கா வரையான முஸ்லிம்கள் அதே தினத்தில் நோன்பு வைகக்கக்கூடியது என்பது இன்று சாத்தியமாகியுள்ளது. அந்த வகையில் அறபா ஹாஜிகள் ஒன்று சேரும் போது அமெரிக்காவில் சஹருடைய நேரம் என்பதால் அனைவருக்கும் இறையருள் கிடைக்கும் பாக்கியம் கிடைக்கிறது.

இதனை விடுத்து அறபா நாள் அல்லாத வேறொரு நாளை அறபா தினம் என நினைப்பது அறிவுப்பூர்வமற்ற செயலாக இருப்பதுடன் நபிகளாhரின் வார்த்தைக்கு மாற்றமாகவும் உள்ளது.

ஆகவே எதிர் வரும் 14ந்திகதியே அறபா நாள் என்பதால் அந்நாளில் நோன்பு வக்கும் படி உலகளாவிய முஸ்லிம்களை அகில இலங்கை உலமா கவுன்சில் கேட்டுக்கொள்கிறது.

மௌலவி முபாறக் அப்துல் மஜீத் மதனி

தலைவர்

அ. இ. உலமா கவுன்சில்

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar