அறபா பிறை விடயத்தில் அ. இ. ஜம்இய்யத்துல் உலமாவும், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் நபிமொழிக்கு முரணாக
செயற்பட்டுள்ளன என்ற எமது உலமா கவுன்சிலின் அறிக்கைக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பாளர் ஹிஷாம் என்ற ஒருவரால் பதில் தரப்பட்டுள்ளது. அது மேற்படி தவ்ஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வமான பதிலாக கருதப்பட முடியாது. அந்த ஜமாஅத்தின் உத்தியோகபூர்வமான பதிலாக இருப்பின் அதன் தலைவர் அல்லது செயலாளரால் பதில் தரப்பட வேண்டும் என்பதுதான் இயக்கங்களின் நியதியாகும்.
எமது கருத்துக்கு பதில் தந்தவர் கூட என்னை அரைகுறை என்றும், மீண்டும் மதுரசாவுக்கு சென்று படிக்க வேண்டும், வேலை இல்லாததால் அறிக்கை விடுவார் என்றும் வீதியில் நிற்கும் நாகரிகமற்ற சராசரி மனிதன் போல் சின்னத்தனமாக பதில் தந்துள்ளார். இத்தகையவர்கள்தான் குர்ஆன் ஹதீதை பின்பற்றுபவர்கள் என சொல்வது நபிகளாரை அவமதிப்பதாகும்.
நபியவர்களிடம் எவர் என்ன கேள்வி கேட்டாலும் பதிலை அழகாக தருவார்கள்.
பிறை சம்பந்தமான எனது அறிக்கையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தை தனிப்பட்ட வகையில் நான் விமர்சிக்கவில்லை. அவர்கள் அவசர குடுக்கைகள் என்றோ, சில பொடியன்மாரை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுபவர்கள் என்றோ, கண்மூடித்தனமாக பீ ஜேயை பின்பற்றுபவர்கள் என்றோ நான் சொல்லவேயில்லை. மாறாக பிறை விடயத்தில் அவர்கள் கருத்து நபிமொழிக்கு முரண் என சொல்லி விட்டு எனது கருத்துக்களை முன் வைத்தேன்.
என்னைப்பொறுத்த வரை வேலை இல்லாவிட்டால் அறிக்கை விடுவார் என்பது சந்தோசமான ஒன்றுதான். எத்தனையோ மனிதர்கள் வேலை இல்லாவிட்டால் சந்தியில் நின்று வம்பளப்பார்கள், அல்லது ஏதாவது பொழுது போக்கில் இருப்பார்கள். அல்லது நாலு பணம் சம்பாதிக்க அலைவார்கள். நான் வேலை இல்லாவிட்டாலும் இருந்தாலும் கூட சமூகம் பற்றி சிந்திப்பவன், அது பற்றிய எனது கருத்துக்களை அறிக்கையாக்குபவன் என்று என்னை ஆக்கிய வல்லவனுக்கு நன்றிகள்.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் அடிக்கடி அறிக்கை விடுகிறது. இவர்களும் வேலை இல்லாததால்த்தான் அறிக்கை விடுவார்கள் என்பதால்தான் என்னையும் அவர்கள் போல் இவர் நினைத்துக்கொண்டார் போலும்.
பிறை சம்பந்தமான எனது தலைமையிலான அகில இலங்கை உலமா கவுன்சிலின் கருத்துக்கு அ. இ. ஜம்இய்யத்துல் உலமாவும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் இது வரை உத்தியோகபூர்வமான பதிலை தரவில்லை என்பதன் மூலம் அவர்களால் உண்மைக்கு மாறாக பதில் தர முடியாதுள்ளது என்பதே வெளிச்சமாகியுள்ளது. சில வேளை எம்மை ஒரு பொருட்டாக அவர்கள் கருதவில்லை என அவர்களை தக்லீத் செய்பவர்கள் கூறலாம். அப்படிப்பார்த்தால் அவர்கள் தாங்கள்தான் மார்க்கம் பற்றி அறிந்தவர்கள் என்ற இறுமாப்பில் இருக்கிறார்கள் என்று பொருள். அது கூட இஸ்லாத்துக்கு முரண்பட்ட பண்பாகும். இத்தகைய இஸ்லாத்துக்கு முரணானவர்களிடமிருந்து குர்ஆன் ஹதீத் அடிப்படையில் பதில் கிடைக்காது.
ஹிஷாம் என்பவர் எழுதியிருந்த விடயங்கள் ஏற்கனவே முஹம்மது வஸீம் என்பவர் எழுதிய விடயங்கள்தான். இவர்களுக்கு அமெரிக்காவை விட்டால் ஆதாரமே இல்லை போலும். அதற்கு நான் ஏற்கனவே பதில் தந்து விட்டேன். அதுதான் இதற்கும் பதிலாகும்.
இறுதியாக இவர் சில கேள்விகளை என்னிடம் முன்வைத்துள்ளார். அவை:
மக்காவில் ஹாஜிகள் அரபா மைதானத்தில் ஒன்று கூடும் நாளில் தான் நாம் இங்கு நோன்பு வைக்க வேண்டும் என்றால் குர்ஆனில் இருந்தோ அல்லது ஆதாரபூர்வமான ஹதீதில் இருந்தோ அதற்குரிய ஆதாரத்தை தரவேண்டும். அடுத்தது மதீனாவில் துல்ஹஜ் தலைப்பிறை தென்பட்ட பின்னர் நபியவர்கள் யாரையாவது மக்காவுக்கு அனுப்பி வைத்து மக்காவில் எப்போது தலைப்பிறை தென்பட்டது என்பதை பார்ப்பதற்கு முயற்சி எடுத்தார்களா? இந்தக்கேள்விகளுக்கு நான் தெளிவாகவே பதில் சொல்லி விட்டேன். இருந்தும் மீண்டும் இதோ.
அள்ளாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் அரபா நாள் நோன்பு நோற்பது அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப்பிந்திய ஆண்டு பாவங்களுக்கு பரிகாரமாகும். ஆதாரம்: முஸ்லிம் 1976.
இந்த ஹதீதில் அறபா நாள் அன்றே நோன்பு வைக்கும்படி நபியவர்கள் நேரடியாகவே சொல்லியுள்ளார்கள். இதன் பொருள் இவர்களுக்கு விளங்கவில்லையாயின் இன்னும் சில விளக்கங்களை தரலாம் என நினைக்கிறேன். அதாவது, நோன்பு காலத்தில் நீங்கள் நோன்பு பிடியுங்கள் என கூறியிருப்பதன் மூலம் நாம் எதனை புரிந்து கொள்கிறோம். நோன்பு மாதத்தில்த்தான் நோன்பு வைக்க வேண்டுமே தவிர வேறு மாத்தில் அது கடமையல்ல என்பதை புரிகிறோம். அதே போல் அறபா நாளில் நோன்பு வையுங்கள் என்றால் அறபா நாளில்தான் நோன்பு வைக்க வேண்டும். வேறு நாட்களில் அல்ல என்பது தெளிவு. ஜும்ஆ நாளில் தொழுங்கள் என்றால் வெள்ளிக்கிழமை ஜும்ஆ நாளில்தான் தொழ வேண்டும் என்பதை குழந்தையும் புரியும்.
அறபா நாள் என்றால் என்ன? இந்தக்கேள்விக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் என்ன பதில் சொல்லும்? ஆனால் உலக முஸ்லிம்களிடம் இக்கேள்வியை கேட்டால் அறபா நாள் என்பது அறபாவில் ஹாஜிகள் கூடுகின்ற ஒரேயொரு நாளையே குறிக்கும் என்பார்கள். அப்படியே அந்த அறபா நாளில் நாம் இங்கு நோன்பு வைப்பதைத்தான் நபியவர்கள் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள். இதைவிட தெளிவான ஆதாரம் ஒரு முஃமினுக்கு தேவைப்படாது.
அடுத்தது நபியவர்கள் யாரையாவது மக்காவுக்கு அனுப்பி பிறை பார்க்க வைத்தார்களா?
மதீனாவிலிருந்து ஒருவரை மக்காவுக்கு அனுப்பி பிறை கண்ட செய்தியை எடுத்து வர குறைந்தது ஆறு நாட்கள் செல்லும். மதீனாவிலிருந்து மக்கா போய்வர சுமார் 800 கிலோ மீட்டர். இன்றைய வாகனத்தில் செய்வதாயின் சென்று வர சுமார் 8 மணி நேரம் எடுக்கும். ஒட்டகத்தில் சென்று வர எத்தனை நாள்; எடுக்கும் என்பதை ஊகித்துக்கொள்ளலாம்.
இங்கு ஒரு விடயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நபியவர்கள் ஒரு விடயத்தை செய்தால், ஏவினால் அது உலகம் அழியும் வரை மார்க்கமாகிவிடும். நபியவர்கள் அவ்வாறு மக்காவுக்கு ஒருவரை அனுப்பி பிறை பார்த்து வரும்படி கூறியிருந்தால் அவ்வாறு செய்தல் மார்க்கமாகியிருக்கும். இந்த நிலையில் ஷாம் தேசத்திலும் இந்தியாவிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் என்ன செய்திருப்பார்கள்? அவர்களும் தமது நாடுகளிலிருந்து மக்காவுக்கு ஒருவரை அனுப்பி மக்கா பிறை பார்ப்பதே மார்க்கமாக சுன்னத்தாக கருதியிருப்பர். இந்த நிலையில் ஷாம் தேசத்திலிருந்து மக்கா சென்று வருவதாயின் இருபது நாட்களுக்கு மேல் செல்லும். இந்தியாவாக இருப்பின் மாதக்கணக்கில் செல்லும். மக்காவுக்கு பிறை பார்க்க சென்றவர் அடுத்த மாதம்தான் இந்தியா வந்து சேர்வார்.
இஸ்லாம் எக்காலத்திற்கும் எல்லா தேசத்திற்குமுரிய மார்க்கம் என்பதனால் இது மக்களுக்கு பிரச்சினையை தோற்றுவிக்கும் என்பதனாலேயே நபியவர்கள் இவ்வாறு வழி காட்டவில்லை. அதன் காரணமாக பின்னால் தொலை பேசி அறிமுகமாகும் காலத்தில் வாழும் மக்களுக்கும் ஏற்றாற்போல் அவர்கள் விளங்கும் வகையில் “அறபா நாளில் நோன்பு பிடியுங்கள்” என்ற அழகிய இன்று தெளிவாகும் வசனத்தை இறைவன் பாவிக்க வைத்துள்ளான். அறபா நாள் என்றால் துல்ஹஜ் பிறை 9 என்பதற்கும் அப்பால் ஹாஜிகள் அறபாவில் ஒன்று சேரும் நாள் என்பது வலுவானது.
இறைவனுடையதும் அவன் தூதரினதும் சில வசனங்கள் அன்றைய காலத்தில் அன்றைய காலத்துக்கேற்ப விளங்கும். அதே போல் இன்றைய காலத்துக்கேற்பவும் இன்று விளங்கும். தற்கு உதாரணமாக ஒரு சக்தியை கொண்டல்லாது உங்களால் வான் பிரதேசத்தை ஊடறுக்க முடியாது என்ற இறைவனின் வசனத்தை அன்றைய மக்கள் விமானம் மூலம்தான் இது சாத்தியம் என விளங்கவில்லை. மாறாக ஏதோ ஒரு சக்தி என விளங்கிக்கொண்டார்கள். அதே போல் இன்று அந்த சக்தி என்பது றொக்கட் என நாம் புரிந்து கொள்கிறோம். இதே போன்றதுதான் அறபா நாள் என்ற வார்த்தையாகும்.
நபியவர்கள் காலத்து மதீனத்து மக்களும் ஏனைய தொலைதூர முஸ்லிம்களும் தொலை பேசி கண்டு பிடிக்கப்பட்ட 18ம் நூற்றாண்டு வரை அறபா நாள் எப்போது என்பதை உடனடியாக அறிய முடியாத நிலையில் குத்து மதிப்பாக தமது பிரதேசத்தில் காணும் துல்ஹஜ் பிறையை வைத்து அறபா நாளாக இருக்கலாம் என்றெண்ணி நோன்பு நோற்றார்கள். தற்போது அறபா நாள் எதுவென அந்நாளுக்கு எட்டு நாட்களுக்கு முன்னரே நூறு வீதம் சரியாக தெரிந்து விடுவதால் நபிகளாரின் கட்டளைப்படி அறபா நாள் அன்றே நோன்பு நோற்க வேண்டும்.
ஒரு விடயத்தை நாம் இன்னமுமு; தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, நாள் என்பது 24 மணித்தியாலயங்களை கொண்டதாகும். உதாரணமாக இன்று திங்கட்கிழமை ஜனவரி முதலாம் திகதி என்றால் அமெரிக்கா முதல் இலங்கை வரை ஜனவரி முதலாம் திகதிதான். இன்றுதான் உலக முழுவதுமுள்ள முஸ்லிமல்லாத மக்கள் புது வருட தினம் கொண்டாடுகிறார்கள். அதனை நாமும் தொலைக்காட்சியில் காண்கிறோம். அதே வேளை இரவு பணிரெண்டு மணி என்பது நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும். ஆனால் நாள் வித்தியாசப்படுவதில்லை. இன்று இலங்கையில் ஜனவரி புது வருடம் என்றும் நாளை அமெரிக்காவில் புது வருடம் என்றும் சொல்வதை யாரும் கேட்டிருக்கிறோமா? இல்லை. இன்று ஜனவரி முதலாம் திகதி என்றால் நேற்றிரவு 12 மணிக்கு இங்கு முசுப்பாத்தி காட்டியிருப்பார்கள், இன்று காலையானதும் அமெரிக்கவில் முசுப்பாத்தி காட்டுவதாக அறிவோம். மாறாக நேற்றிரவு இலங்கையில் 12 மணி க்கு ஆரம்பித்த இன்றைய தினம் நாளைதான் அமெரிக்காவில் ஆரம்பிப்பதில்லை. மாறாக உலகம் முழுவதும் இன்றுதான் முதலாம் திகதி. இரவு பகல் என்பதுதான் வித்தியாசமே தவிர முழு நாளும் வித்தியாசப்படாது. ஆனால் முஸ்லிம்கள் மத்தியில் இன்று மக்காவில் அறபா நாள் நாளை இலங்கையில் அறபா நாள் என்பது கூத்தாக தெரியவில்லையா? அறபா என்பதே மக்காவில் உள்ள இடம்தான். அப்படியிருந்தும் நாட்டுக்கு நாடு அறபா நாளை உருவாக்குங்கள் என்று நபியவர்கள் சொல்லியுள்ளார்களா?
அது மட்டுமல்ல இதன் மூலம் இஸ்லாம் அரசாட்சி செய்ய முடியாத, நிர்வாகத்துக்கு உதவாத மார்க்கமாக நாம் அடையாளப்படுத்துகிறோம். உதாரணமாக முழு உலகமும் அல்லது பாதி உலகம் இஸ்லாமிய ஆட்சின் கீழ் ஒரே கலிபாவின் கீழ் இருந்தால் இந்தோனிசியாவில் உள்ள ஒருவரும் துல்ஹஜ் மாதம் எட்டாம் திகதி மரண தண்டனை நிறைவேற்றுங்கள் என கலீபா கட்டளை இட்டால் எந்த ஊர் எட்டாம் திகதி என்ற கேள்வி ஏற்படும். மக்காவின் படியான எட்டாம் திகதியா இந்தோனேசியாவின் படியான எட்டாம் திகதியா என்ற கேள்வி மூலம் இஸ்லாம் நடைமுறைச்சாத்தியமான மார்க்கம் இல்லை என்ற முடிவுதான் வரும்.
இதனை நான் தனிப்பட்ட வகையில் ஒரு மொழி பெயர்ப்பாளராக கண்டுள்ளேன். சஊதியிலிருந்து வரும் ஒருவர் அவரது விசா றபிஉல் அவ்வால் 15ம் திகதி முடிவுறும் என்றிருக்கும். அப்படியானால் எந்த ஊர் றபிஉல் அவ்வல் 15ந்திகதி என்று தேட வேண்டும். இலங்கையில் றபிஉல் அவ்வல் 15ந்திகதி என்பது மாhச் 20 ந்திகதியாக இருக்கும். சஊதியல் மார்ச் 21 அல்லது 19ந்திகதியாக இருக்கும். இதுவெல்லாம் என்ன? ஏன் நாம் இன்னும் புரியாமல் இருக்கிறோம்?
ஆக அறபா நாளை ஊருக்கு ஊர் வேறாக வைப்பது இஸ்லாம் இந்த உலகுக்கு பொருத்தமற்ற மதமாக காட்டும் இஸ்லாம் விரோதிகளின் முயற்சியாகும். மாhறாக மக்காவில் துல்ஹஜ் பிறை காணப்பட்டு எப்போது அறபா என அறிவிக்கிறார்களோ அதுவே முஸ்லிம்களின் அறிவிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் படி உலக முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் ஒரே அறபா நாளில் நோன்பு பிடிப்பதே சுன்னாவின் நேரடியான வழிகாட்டலாகும்.
- முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
அகில இலங்கை உலமா கவுன்சில்