( ஐ. ஏ. காதிர் கான் )
முஸ்லிம்கள் போயா தினத்தில் மாத்திரம் உழ்ஹிய்யாக் கொடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், ஏனைய மதத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், உழ்ஹிய்யாவை சட்ட விதிமுறைகளைப் பேணி முறையாக நிறைவேற்றுமாறும,;; முதலீட்டு
ஊக்குவிப்பு பிரதியமைச்சரும், ஸ்ரீல. சு. க. மத்திய கொழும்பு அமைப்பாளருமான “ஜனாதிபதி சட்டத்தரணி” பைஸர் முஸ்தபா முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உழ்ஹிய்யாக் கடைமைகளை தங்குதடையின்றி நிறைவேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு, முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
அகில இலங்கை ஜம்-இய்யத்துல் உலமா ஹலால் பிரிவின் ~ரீஆப் பகுதி பொறுப்பாளர் அ~;n~ய்க் இர்பான் முபீன் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இம் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இது தொடர்பில் பிரதியமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது:-
கடந்த 11ம் திகதி முதல் எதிர் வரும் 17ம் திகதி வரையான காலப் பகுதிக்குள் குர்பானுக்காக பிராணிகளை உரிய ஆவணங்களுடன் வாகனங்களில் எடுத்துச் செல்லும் போது தடைகள் ஏட்படாதவாறு நடவடிக்கை எடுக்குமாறும், நாட்டிலுள்ள மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரே~;ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள், மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள, பிராந்தியங்களுக்குப் பொறுப்பான சிரே~;ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இம்மாதம் 2ம் திகதி விசேட சுற்று நிருபங்களை பொலிஸ் திணைக்களம் ஊடாக அனுப்பி வைக்கப்படடுள்ளது என்றார்.
உழ்ஹிய்யாக் கடைமைகளை நிறைவேற்றுவது தொடர்பில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் அல்லது அது தொடர்பில் விளக்கம் தேவைப்படும் பட்சத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி ரியாஸ்டீன் சில்மியின் 072-3007300 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ, அல்லது அகில இலங்கை ஜம்-இய்யத்துல் உலமா ஹலால் பிரிவின் ~ரீஆப் பகுதி பொறுப்பாளர் அ~;n~ய்க் இர்பான் முபீனின் 071-5188822 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொண்டு அறியத் தருமாறும் பிரதியமைச்சரின் ஊடகப்பிரிவு முஸ்லிம்களிடம் கேட்டுள்ளது.