பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
பெருநாட்களின் போது நபியவர்களும் சஹாபாக்களும் தக்பீர் சொன்னதாக உறுதியான ஹதீத்கள் தெரிவிக்கின்றன. தக்பீரை சத்தமின்றி சொல்ல வேண்டும் என சிலர் பிரசுரம் வெளியிட்டுள்ளனர். ஆனால் நபிகளார் காலத்தில் சஹா பாக்கள் சத்தமிட்டு தக்பீர் சொன்னதாக புகாரியில் வரும் ஹதீத் தெளிவு படுத்துகிறது.
உம்மு அத்திய்யா கூறியதாவது, பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட்டுச்செல்ல வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள குமரிப்பெண்க ளையும் புறப்படச்செய்ய வேண்டுமெனவும் கட்டiயிடப்பட்டிருந்தோம். எந்த அளவிற்கென்றால் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைக்கூட புறப்பட செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டோம். பெண்கள் ஆண்க ளுக்குப்பின்னால் இருந்து கொண்டு ஆண்கள் தக்பீர் சொல்லும் போது அவர்களும் தக்பீர் சொல்வார்கள். ஆண்கள் பிரார்த்திக்கும் போது அவர்களும் பிரார்த்திப் பார்கள். அந்த நாளின் அருள் வளத்தையும், தூய்மையையும் எதிர் பார்ப்பார்கள். –புகாரி 971.
இந்த ஹதீதின் படி ஆண்கள் தக்பீர் சொல்லும் போது பெண்களும் தக்பீர் சொல்வதாக சஹாபி பெண் அறிவிக்கிறார். பெண்கள் தொழுகைக்காக அமர்வது ஆண்க ளுக்கு பின்னால் என்பதால் ஆண்கள் சத்தமிட்டு தக்பீர் சொல்வதும் சத்தமிட்டு துஆ செய்வதும் பெண்களுக்கு கேட்டி ருக்கிறது என்பது மிக தெளிவாகவே தெரிகிறது.
பெருநாள் திடல் என்றால் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் ஒன்று சேர்வார்கள். முதலில் பெரியவர்கள், பின்னர் சிறுவர்கள் அதன் பின் பெண்கள் என்பதே நபியவர்கள் காலத்து நடைமுறையாகும். இதன் படி ஆண்கள் சத்தமாக தக்பீர் சொன்னதனாலேயே அது சிறுவர்களையும் தாண்டி பெண்களுக்கு கேட்டதால் அவர்களும் தக்பீர் சொல்லியுள் ளார்கள் என்பது மிக தெளிவாகவே புரிகிறது.
இதனை சரிவர புரியாமல் சிலர் அவசரப்பட்டு, தக்பீர் சத்தமில்லாமல் சொல்ல வேண்டுமென பிரசுரம் வெளியிட் டுள்ளமை மக்களை பிழையாக வழி நடத்துவதாகும்.
ஆகவே பெருநாள் காலத்தில் அடுத்தவருக்கு கேட்கும் வகையில் சத்தமிட்டு தக்பீர் சொல்வதே நபிவழியாகும்.
-மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
அகில இலங்கை உலமா கவுன்சில்