BREAKING NEWS

மார்க்க அறிஞர் மௌலவி ஹாஜா முகைதீன் இலங்கையில் இலக்கியச் சுற்றுலா


( ஐ. ஏ. காதிர் கான் )

தமிழ் நாடு- இராம நாதபுரம், சித்தார் கோட்டையைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும,; இலக்கிய வாதியும், மார்க்க அறிஞருமான மௌலவி அல்ஹாஜ் ஹாஜா முகைதீன் ஆலிம் (வயது-65), மினுவாங்கொடை கலை-இலக்கிய வட்டத்தின் அழைப்பின் பேரில,; கடந்த மாதம் இலங்கை வந்திருக்கிறார்.

இவர், இலங்கையில் தங்கியிருக்கும் காலப் பகுதியில், நாட்டின் பல பிரதேசங்களிலும் இடம் பெறும் கலை-இலக்கிய கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதோடு, இலங்கையில் மிகப் பிரபல்யம் பெற்ற வரலாற்றுப்  புகழ் மிகு இஸ்லாமிய புனிதஸ்தலங்களுக்கும் சென்று, அவைகளைத் தரிசிக்கவுள்ளார்.
மினுவாங்கொடை கலை-இலக்கிய வட்டத்தின் அனுசரணையில், வட்டத்தின் தலைவர் கலாபூ~ணம் மு.ப~Pர் தலைமையில் மினுவாங்கொடை பிரதேசத்திலும், நாட்டின் ஏனைய பல பிரதேசங்களிலும,; இதுவரை பல கலை-இலக்கிய சந்திப்புக்கள் மற்றும்  கலந்துரையாடல்கள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக, வட்டத்தின் செயலாளரும் சிரே~;ட ஊடகவியலாளருமான கலாபூ~ணம் எம். ஏ. எம். நிலாம் தெரிவித்தார்.
கொழும்பு-தெவட்டகஹ பள்ளி வாசலுக்கருகாமையில் அடங்கப்பட்டிருக்கும் அ~;-N~ஹ் உதுமான் வலியுல்லாஹ்வின் ஸியாரம், பலாங்கொடை-தப்தர் ஜெய்லானியில் அடங்கப்பட்டிருக்கும் வலிமார்களின் ஸியாரங்கள் உள்ளிட்ட , திருகோணமலை, கிண்ணியா, மாத்தளை, கள்-எலிய மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களுக்கும் சென்று, அங்குள்ள அரபிக் கலாசாலைகள், சமய நிறுவனங்கள் மற்றும் சமயஸ்தலங்களைப் பார்வையிட்டதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்,
மௌலவி ஹாஜா முகைதீன,; இலங்கையில் இலக்கியச் சுற்றுலாவை முடித்துக்கொண்டு, எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு மீண்டும் திரும்பிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar