முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சரும் ஸ்ரீல.சு.க. மத்திய கொழும்பு அமைப்பாளருமான “ஜனாதிபதி சட்டத்தரணி” பைஸர் முஸ்தபாவின் அழைப்பின் பேரில், துருக்கி நாட்டின் முதற்தர முதலீட்டாளர்களுள் ஒருவரும், துருக்கி ஏ.ஜீ.பி. குறூப் நிறுவனத்தின் தலைவருமான ஹஸன் சித்கி அயன் இலங்கை வந்துள்ளார்.
பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபாவின் அண்மைய துருக்கி விஜயத்தின் போது அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததையடுத்தே, துருக்கி முதலீட்டாளர் ஹஸன் சித்கி அயன் தற்போது இலங்கை வந்துள்ளார். இது தொடர்பான கலந்துரையாடலொன்று, கொழும்பு- உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில,; நேற்று (28.11.2013) வியாழக்கிழமை பிரதியமைச்சருக்கும் துருக்கி முதலீட்டாளருக்கும் இடையில் இடம் பெற்றது. இச் சந்திப்பின்போது, துருக்கிற்;கான இலங்கை நாட்டுத் தூதுவர் திருமதி பாரதி விஜேரத்ன உள்ளிட்ட பிரதி நிதிகள் பலரும் கலந்து கொண்டனர். துருக்கி முதலீட்டாளர் ஹஸன் சித்கி அயனினால், பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு நினைவுச் சின்னம் ஒன்றும், இச் சந்திப்பின் போது அன்பளிப்புச் செய்யப்பட்டது