BREAKING NEWS

வவுனியா சென்று கொண்டிருந்த செனல் 4 ஊடகவியலாளர்களுக்கு அநுராதபுரத்தில் எதிர்ப்பு

வவுனியா சென்று கொண்டிருந்த செனல் 4 ஊடகவியலாளர்கள் கொழும்பு திரும்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.  அவர்கள் வாகனம் ஒன்றின் ஊடாக கொழும்பு வந்து கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
வவுனியா சென்று கொண்டிருந்த செனல் 4 ஊடகவியலாளர்களுக்கு அநுராதபுரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  செனல் 4 ஊடகவியலாளர்கள் பயணித்த ரயிலை வழிமறித்த சிலர் ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர். 
இதனால் அதிக நேரம் ரயிலின் உள்ளேயே இருந்த செனல் 4 ஊடகவியலாளர்கள் பின்னர் கொழும்பு நோக்கி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

செனல் 4 ஊடகவியலாளர்கள் கொழும்பு வந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar