நிந்தவூரில் பொது மக்களினால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த மர்ம நபர்களை தற்போது பாதுகாப்பு தரப்பினர் அங்கிருந்து விடுவித்து காப்பாற்றிக் கொண்டு சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது இடம்பெற்ற கைகலப்பு மற்றும் சம்பவங்களினால்
நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் தாஹிர் உட்பட சிலர் காயமடைந்துள்ளனர்.
நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் தாஹிர் உட்பட சிலர் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்கள் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும், நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் தாஹிர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.