கொழும்பு- கோட்டை, புராதன ஒல்லாந்தர் ஆஸ்பத்திரி அமைந்திருந்த பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள, மூன்று நட்சத்திர அந்தஸ்துள்ள சிட்டி ஹோட்டலுக்கான ஆரம்ப வைபவ நிகழ்வில்,
ஸ்ரீல.சு.க. மத்திய கொழும்பு தொகுதிக்கான அமைப்பாளரும், முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சருமான “ ஜனாதிபதி சட்டத்தரணி” பைஸர் முஸ்தபா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். பெஃயார்வே ஹோல்டிங்ஸ் நிறுவனம் இந்த சிட்டி ஹோட்டலை, 196 அறைகளைக் கொண்டதாக நிர்மாணிக்கவுள்ளது, 2015 ஆம் வருட நடுப்பகுதியில் பூர்த்தியாகவுள்ள இத்திட்டத்தின் மூலம் 300 பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கக் கூடிய வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )