கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகமும், கல்முனை மாநகர முதல்வருமான சட்டமுதுமாணி நிஸாம் காரியப்பருக்கு முதல்வர் ஆடை அணிவிக்கும் விழாவும் பொதுகூட்டமும் நேற்று (24) கல்முனை நகர மண்டபத்திற்கு அருகில் இடம்பெற்றது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் எம்.எஸ்.எம்.சத்தார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான சட்டமுதுமாணி ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஏ.எல்.தவம், ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான ரஊப் ஹக்கீமினால் முதல்வர் ஆடை அணிவிக்கப்பட்டதுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் சிவில் அமைப்புக்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.