BREAKING NEWS

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று

 ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மீண்டும் கூடி கட்சியின் தலைமைத்துவம் குறித்து முடிவுகளை எடுக்கவிருக்கின்றது.
அனைவரின் இணக்கப்பாட்டையும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஐக்கிய பிக்குகள்தேரர்களின் ஒப்புதலுடன் தயாரிக்கப்பட்டு ரணில் விக்கிரமசிங்கவுக்கு யோசனைகள் அடங்கிய இந்த ஆவணத்தில் கருஜயசூரியா மற்றும் சஜீத் பிரேமதாச ஆகியோரும் ஒப்பமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள “தலைவர்” என்ற பதவிக்குப் பதிலாக புதிய யோசனைகளின் பிரகாரம் “தலைமைத்துவ சபை” என்ற புதிய முறைமை இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள “ஆலோசனை சபை”  “தலைமைத்துவ சபை” எனவும் மற்றப்பட வேண்டும் எனவும் புதிய யோசனைகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar