BREAKING NEWS

அமைச்சர் அதாவுல்லா கட்டிக்கொடுத்ததை, கல்முனை மாநகர சபை கைவிட்டது



(யு.எம்.இஸ்ஹாக்)

உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவருமான  அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவினால் 49 இலட்சம் ரூபா நிதியில் கட்டிமுடிக்கப்பட்ட  நற்பிட்டிமுனை அஸ்ரப் விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கு இரண்டு வருடங்கள் கடந்தும் இன்னும் விளையாட்டு வீரர்களின் பாவனைக்கு பயன்படுத்தப்படாமலிருந்து வருகின்றது.

இன்று அந்த பார்வையாளர் அரங்கு இஸ்லாத்துக்கு முரணான செயல்கள் இடம் பெறுகின்றது. விளையாட அமைத்த அரங்கு மது,சூதுக்கான மத்திய நிலையமாக மாறியுள்ளது. மைதானம் மழை நீரால் சேறும் சகதியுமாக மாடுகள் மேயும் மேய்ச்சல் தரையாக மாறியுள்ளது.

இவற்றுக்கெல்லாம் பொறுப்புக் கூறவேண்டிய கல்முனை மாநகர சபை நிருவாகம்  பொறுப்பற்ற முறையில்  நடந்து வருகின்றது. நற்பிட்டிமுனையில் இருந்து அந்த மக்கள் போட்ட வாக்குப் பிச்சையில் வேதாந்தம் பேசும்  03 மாநகர சபை உறுப்பினர்களே இந்த அநீதிக்கு நீங்கள் சொல்லும் பதில்தான் என்ன?

அதாவுல்லாவின் நிதி என்பதற்காக கவனம் எடுக்காமல் இருந்தால் நீங்கள் மூவரும் இந்த கிராமத்துக்கு செய்யும் பெரும் துரோகத் தனமாகும்...!

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar