BREAKING NEWS

அறிவுச் சுரங்கம் பாணந்துறை ஜீலாண் வித்தியாலயத்தில்

லங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தினால் நடாத்தப்படும் அறிவுச் சுரங்கம் களுத்துறை மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான இறுதிப் போட்டி நிகழ்வு (12-11-13) பி.பகல். பாணந்துறை ஜீலாண் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர், புரவலர் ஹாசீம் உமர், பிகாஸ் நிறுவனத்தின் அனுசரனையாளர்கள், உலக அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத், பேராசிரியர் தில்லைநாதன், முஸ்லீம் பாடசாலைகள் பிரதிப் பணிப்பாளர் தாஜூத்தீன் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வின் இறுதி அறிவுப் போட்டிகளை  ஜீலான் வித்தியாலய அதிபரும் அறிவிப்பாளருமான ஏ.ஆர்.எம். ஜிப்றி, நடாத்தினார். இர்சாத் ஏ காதர், அகமட் எம். ஜிப்றி ஆகியோறும் இந் நிகழ்வினை நாடத்தினர். மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.
இறுதியாக 25ஆயிரம் ருபா முதற்பரிசினை களுத்துறை முஸ்லீம் மகளிர் வித்தியாலயம் பெற்றுக்கொண்டது. இரண்டாம் இடத்தினை தர்கா நகர் சாஹிராக் கல்லூரி பெற்றுக்  கொண்டது.




Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar