BREAKING NEWS

கடவுச்சீட்டுகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள 1962

கடவுச்சீட்டுகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் பொதுமக்களுக்கென 1962 என்ற விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


 இதன்படி பொதுமக்களுக்கு புதிய கடவுச்சீட்டுக்களை எவ்வாறு பெறுவது? காலாவதியான கடவுச்சீட்டை எவ்வாறு புதுப்பிப்பது? கடவுச்சீட்டுகள் காணாமல் போனால் என்ன செய்வது? என்பன  உட்பட  கடவுச்சீட்டுகள் தொடர்பான சந்தேகங்களை இந்த தொலைபேசி இலக்கத்தினூடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

 நாட்டில் எந்த பாகத்திலிருந்தும் தமிழ், சிங்கள அல்லது ஆங்கில மொழிகளில் இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.  இதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar