2006 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரை சமுர்த்தி உதவி பெறுவோரின் பொருளாதாரம் மேம்பட்டதனாலேயே இவ்வாறு குறைக்கப்பட்டதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தினால் பாராளுமன் றத்திற்கு வழங்கப்பட்ட பரிந்துரை ஒவ்வொன்றையும் பின்பற்றியே திவிநெகும திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
சிலர் இதனை பிழையாக விளங்கிக்கொண்டிருக்கி றார்கள். சிலர் நாம் உச்ச நீதிமன்றத்தி னால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை புறந்தள்ளிவிட்டே திட்டத்தை நடை முறைப்படுத்தியிருக்கிறோம் என்று கூறுகிறார்கள். இதில் உண்மையில்லை என்றும் அமைச்சர் பசில் தெரிவித்தார்.
திவிநெகும திணைக்களம் 2014 ஜன வரி 1ம் திகதி முதல் இயங்க ஆரம் பிக்கிறது என்றும் அமைச்சர் பசில் தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்தி அமைச் சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்ட அவர் நேற்று பாராளுமன்றத்தில் மேற்கண்ட வாறு தெரிவித்தார். எமது நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களும் எழுச்சி பெற வேண்டும். பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே ஜனாதிபதி திவிநெகும திட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.
கிராமப்புற, தோட்டப்புற, நகரில் மக்கள் அனைவருக்கும் சமமான முறையில் வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். கிராமப்புறத்திலிருக்கும் மக்களின் குடும்ப வருவாயை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் திவிநெகும திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மனைப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதும் இதன் நோக்கமாகும்.
வ்வொரு வீட்டிலும் சுய தொழில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 10 பேர்ச்சஸ் முதல் 20 பேர்ச்சஸ் காணிகளைக் கொண்ட 22,903 காணிகள், 20 – 10 பேர்ச்சர்ஸ் உடைய 44,936 காணிகள், 40 பேர்ச்சர்ஸ் கொண்ட 32,059 காணிகள் இன்று மனைப் பொருளாதார திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
திவிநெகும திட்டத்தின் ஊடாக வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கை மூலம் காய்கறிகளின் விலைகள் வெகுவாக குறைந்துள்ளன. கறிவேப்பிலை, இஞ்சி, ரம்பை போன்றன ஒவ்வொரு வீடுகளிலும் செய்கை பண்ணப்பட்டது. ஆனால் இன்று இவற்றை சுப்பர் மார்க்கட்டுகளில் வாங்கும் நிலை உருவாகியுள்ளது. திவிநெகும திட்டத்தின் ஊடாக இந்த நிலை மாறி வருகிறது.
2012 ஐ விட 2013 இல் காங்கறிகளின் விலை குறைந்துள்ளது. வர்த்தக ரீதியாக ஏற்றுமதி காய்கறி செய்கையில் ஈடுபடுபவர்கள் பாதிக்காத வகையில் அவர்களுக்கு உரமானியமும் வழங்கப் படுகிறது.
இதேபோன்று பால் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் பசும்பால் குடிப்பதை ஊக்குவித்து வருகிறோம். முன்பு பாடசாலைகளில் கட்டாயமாக பால் மாவினால் தயாரிக்கப்படும் பாலை மாணவர்கள் குடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியிருந்தார்கள். மறுத்தால் பெற்றோரிடமிருந்து கடிதம் கொண்டுவர வேண்டும் என்றும் மாணவர்களுக்கு சொல்லப்பட்டது. இவ்வாறு தான் இந்த நாட்டில் பால்மா பாவனையை கொண்டு வந்தார்கள். பசும்பால் குடித்தால் சளித்தொல்லை ஏற்படும் என அச்சுறுத்தினார்கள். இந்த நிலை மாற்றப்பட்டு வருகிறது.
குறிப்பாக ‘பசும் பால்’ நல்லது என வைத்தியர்கள் இப்போது பரிந்துரை செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள். மீன்பிடித்துறையிலும் இன்று நாடு மிகவும் முன்னேறி வருகிறது. மீனவர்களுக்கு தேவையான சகல வசதிகளையும் இந்த அரசு செய்து வருகிறது. இலங்கையில் புடவைக் கைத்தொழில் புரட்சி ஏற்பட்டிருந்தது. அது முற்றாக இல்லாதொழிக்கப்பட்டது. கைத்தறி முதல் புடைவைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. திவிநெகும திட்டத்தின் ஊடாக கைத்தறி நெசவுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியாக ஒரு மனிதனை மேம்படுத்தினாலும் அவரை எமது பாரம்பரிய கலை, கலாசார, சமய, பண்பாடுகள் உள்ளவராக உருவாக்க வேண்டும். இதற்கான அடிப்படை திட்டமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கல் திட்டங்கள், நீர்ப்பாசன திட்டங்கள், வீதிகள், கட்டடம், உட்கட்டமைப்பு வசதிகள்என சகல துறைகள் தொடர்பாகவும் அரசு கவனம் செலுத்தியுள்ளது. தாய், சேய் நல நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்பு மர நிழல்களில் இயங்கிய தாய், சேய் நிலையங்கள், இன்று நவீன கட்டடங்களுக்குள் இயங்குகின்றன.