BREAKING NEWS

மீனவர் பிரச்சினைக்;குத் தீர்வுகாண தமிழக முதல்வர் தடை

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய மத்திய அரசாங்கம் தயாராக உள்ள போதும் தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவே இதற்கு தடையாக இருந்து அரசியல் செய்து வருகிறார். இந்தப் பிரச்சினையில் விட்டுக் கொடுப்பதற்கு நாம் தயாராக இல்லை, எமது நிலைப்பாட்டில் தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரி வித்தார்.

கருணாநிதிக்கு மீனவர் பிரச்சினை தொடர் பில் தெளிவு இருப்பதாக கூறிய அமைச்சர், அவர் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் பிரச்சினையை தீர்க்க கூடுதல் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார். தற்போதைக்கு இந்திய தேர்தல் முடியும் வரை இந்த விவகாரத்தில் முடிவு ஏற் பட வாய்ப்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களின் படகுகளை திருப்பி வழங்காமல் தடுத்து வைக்கும் செயற்பாடு தொடர்ந்து கடுமையாக முன்னெடுக்கப்படும் எனவும் எமது வளங்களை சூறையாடி வடபகுதி மீனவர்களுக்கு பாதிப்பு எற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தீர்வுகாணப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar