BREAKING NEWS

ரியாழ் மெளலவியின் ஜனாஸா நல்லடக்கத்தில் பெருந்திரளானோர் பங்கேற்பு

அகில இல ங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் முன்னாள் பொதுச் செயலாளரும் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரியுமான அஷ்ஷெய்க் எம்.ஜே.எம். ரியாழ் கபூரி அன்னாரது ஜனாஸா தொழுகை இடம்பெற் றதுடன் நீர்கொழும்பு பெரிய முல்லை ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடி யில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நாடுமுழுவதிலும் உள்ள பிரபல உலமாக்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், புத்திஜீவிகள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் அன்னாரது ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டனர்.
1933 ஆம் ஆண்டு ஜனவரி 25ம் திகதி கம்பஹா மாவட்டத்திலுள்ள கம்மல்துறை கிராமத்தில் பிறந்த அவர் ஆரம்பக் கல்வியை 1938 ஆம் ஆண்டு தற்போது அல் பலாஹ் மகா வித்தியாலயம் என்று அழைக்கப்படும் கம்மல்துறை முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆரம்பித்துள்ளார். பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்ட அவர் 1951 ஆம் ஆண்டு மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியில் சன்மார்க்கக் கல்வியைக் கற்று ‘கபூரி’ என்ற பட்டத்துடன் மெளலவியாக வெளியேறினார்.
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயிற்றப்பட்ட அவர் 1952 ஆம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறினார். புத்தளம் ஸாஹிராக் கல்லூரியில் முதல் நியமனம் பெற்று ஆசிரியராக தனது சேவையை ஆரம்பித்தவர், கல்பிட்டி, மட்டக்குளி, மருதானை அல் ஹிதாயா, மருதானை ஸாஹிராக் கல்லூரி மற்றும் கண்டி கிங்ஸ்வூட் ஆகிய கல்லூரியில் சேவையாற்றியுள்ளார்.
சுமார் 20 வருடங்கள் ஆசிரியராக கல்வித் துறையில் சேவையாற்றிய அவர், கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பாடவிதான குழுவுக்கு நியமிக்கப்பட்டு அதன் எழுத்தாளராகவும் ஆலோசகராகவும் கடமையாற்றினார்.
1973 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை வட்டார கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்ட அவர், இஸ்லாம் மற்றும் அரபுக் கல்விக்கான பிரதிப் பணிப்பாளராக தரமுயர்வு பெற்றார். மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதான பரீட்சை கட்டுப்பாட்டாளரான அவர் சுமார் 17 வருடங்களாக கல்விப் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளராக சேவையாற்றினார்.
பேராதனை கல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியான இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்பின்படிப்பை முடித்தார். அத்துடன் எகிப்து அல் அஸ்ஹர் கல்வி கலாசாலையில் இமாம், கதீப் மார்களுக்கான பயிற்சியையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar