வர்த்தக, நுகர்வோர் விவகார அமைச்சின் மீதான குழு நிலை விவாதம் நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கிணங்க பால்மா களஞ்சியசாலை களை எந்த நேரத்திலும் சோதனைக்குட்படுத் தக்கூடிய வகையிலான சட்டதிட்டங்கள் வெளிவரவிருக்கும் புதிய வர்த்தமானியில் உள்ளடக்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார். பால்மாவின் விலை அதிகரிப்பை நோக்காகக் கொண்டு செயற்கை தட்டுப் பாட்டை ஏற்படுத்த முனையும் பால் மா நிறுவனங்களுக்கு எச்சரிக்கைவிடுக்கும் வகையி லேயே அமைச்சர் நேற்று பாராளு மன்றத்தில் இது குறித்து அறிவித்தார்.
இதேவேளை பால் மாக்களை பதுக்கி வைக்கக்கூடிய இடங்களை கண்டறிந்து அவற்றை சோதனைக்குட்படுத்துமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு விசேட பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதனையும் அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டினார்.
பண்டிகைக்காலத்தில் நுகர்வோர் பால்மா தட்டுப்பாட்டினை எதிர் நோக்க கூடாதென்பதில் தான் உறுதியாக இருப்பதாக கூறிய அமைச்சர், மேற்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவது குறித்து அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு உத்தரவளித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
பால்மா தட்டுப்பாடு, விலையதிகரிப்பு தொடர்பில் பல்வேறு கருத்துகள் எதிர்க் கட்சியினரால் முன்வைக்கப்பட்டன. நாம் பால் மா வகைகளை பதுக்கி வைத்த பல நிறுவனங்களை சுற்றிவளைத்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். இதேவேளை உலக சந்தையில் பால்மா ஒரு தொன்னின் விலை 3600 ரூபாவிலிருந்து 5 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
மருந்துகளுக்கும் அடுத்த பெப்ரவரி முதல் கட்டுப்பாட்டு விலைகளை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வர்த்தகர்கள் தன்னிச்சையாக மருந்துப்பொருட்களுக்கு விலையதிகரிப்புச் செய்வதைத் தடுக்கும் வகையில் மருந்துகளுக்குக் கட்டுப்பாட்டு விலைகள் விதிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இதன்மூலம் பொதுமக்கள் பெரும் நன்மையடைவர் எனவும் தெரிவித்தார்.