BREAKING NEWS

கல்முனை மாநகர சபையின் கல்முனைக்குடியின் பெரிய பள்ளி வீதியின் நிலை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காhங்கிரசின் ஆட்சியில் உள் ஒரேயொரு மாநகர சபையான கல்முனை மாநகர சபையின் கல்முனைக்குடியின் மிக முக்கிய வீதியான பெரிய பள்ளி வீதியின் நிலைதான் இது
. இன்று (12.12.2013) இரவு 7.30க்கு இருளில் மூழ்கிக்கிடக்கும் நிலைதான் இது. கடைகளின் வெளிச்சமும் அணைக்கப்பட்டால் இந்த வீதி காட்டு வீதியாகிவிடும். இந்த வீதிக்கு முன்னாள் மேயர் சிராஸ் எதையும் செய்யவில்லை.
அதே போல் இன்னாள் மேயருக்கும் இப்படி ஒரு வீதி இருக்கின்றதா என்று தெரியவில்லை போலும். இந்த வீதியில் உள்ள மக்களும் கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்து இன்று நாதியிழந்து நிற்கிறார்கள். தமக்காக பேசக்கூடிய, குரல் எழுப்பக்கூடிய ஒருவரை இந்த வீதி மக்கள் கடந்த தேர்தலில் தேர்வு செய்ய முயற்சிக்கவில்லை. மாறாக கல்முனைக்குடிக்கு மேயர் என்ற பிரதேச வாதம் காரணமாக மு. காவுக்கும் நிசாம் காரியப்பருக்கும் வாக்குகளை அள்ளிப்போட்டு விட்டு இன்று இருளில் நிற்கிறார்கள். ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த காசு என்னவாயிற்று என்று கூட கேட்க திராணியற்ற மக்களாக இருப்பது மிக மிக கவலை தருவதாகும்.
-முபாறக் மௌலவி

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar