BREAKING NEWS

நாம் புலிகளுடன் எந்த தொடர்பையும் கொண்டிருக்கவில்லை

நானோ அல்லது நாமோ விடுதலைப் புலிகளுடன் எந்த தொடர்பையும் கொண்டிருக்க வில்லை. அரசியல் தீர்வொன்றுக்கான இணக்கப்பா டொன்றை ஏற்படுத்திக்கொள்வதன் நிமித்தமான தொடர்புகளை மட்டுமே விடுதலைப் புலிகளுடன் மேற்கொண்டிருந்தோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. இரா. சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த தொடர்பு மட்டுமே தவிர வன்முறைச் சம்பவங்களுடன் எமக்கு எந்த தொடர்பும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். வரவு- செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசு தான் விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்ததே தவிர எமக்கும் அவர்களுக்கும் தொடர்புகள் இல்லை.
2005 ஜனாதிபதி தேர்தலின்போது புலிகள் சாதகமாக செயற்பட்டதாலேயே ஆளும் தரப்பு வெற்றிபெற்றது என்பதை மறுக்க முடியுமா?
கே. பி. என்றொருவர் இருக்கிறார். அவரை எனக்கு தெரியாது. அவர் யார் என்றே தெரியாது. கண்டதும் இல்லை. ஆனால் அவர் தான் இன்று அரசின் நெருங்கிய நண்பராக இருக்கிறார் என்றும் இரா சம்பந்தன் தெரிவித்தார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar