BREAKING NEWS

பயணிகளிடம் அநாகரிகமாக நடக்கும் வட மாகாண பேருந்து நடத்துனர்க

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின்  ஒரு சில பேருந்து நடத்துனர்கள் நாகரிகமற்ற முறையில் நடந்துகொள்வதாக
அண்மைக்காலமாக தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன. குறிப்பாக தாய்மார்கள்,  இளம்பெண்கள், பாமரமக்கள் போன்றவர்களை மேற்படி நடத்துனர்கள் மிகவும் தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவதாகவும் பெண் பயணிகளை கண்ட படி தொட்டு பேருந்தினுள் தள்ளிவிடுவதாகவும் இறக்கி விடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பேருந்து தரிப்பிடம் இல்லாத இடங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றுதல் பயணிகளை ஆடு ,  மாடுகளைப் போல அதிகளவில் ஏற்றிச் செல்லல் பயணிகளிடமிருந்து  பணத்தினைப் பெற்றுக்கொண்டு  பயணச் சீட்டுக்களை வழங்காமல் விடுதல் பயணிகள் வழங்கும் பணத்திற்கு மீதியாக வரும் சிறு தொகை பணத்தினை  வழங்காமல் விடுதல், முதியவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள்,  அங்கவீனமுற்றோர் மற்றும் மதகுருமார்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஆசனங்களை அவர்களுக்கு வழங்காது விடுதல் போன்றவை அதிகரித்து வருவதாக நாளாந்தம் மக்களினால் முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் இல்லையேல் வருகின்ற ஜனவரி மாதமளவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் எச்சரித்துள்ளார். மேலும் இவ்விடயங்கள்  தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தனியார் பேருந்து சங்க தலைவர்களும் சமாசத் தலைவர்களும் கூடிய கரிசனை எடுத்து இத்தகைய செயற்பாடுகளை  உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்றும் அமைச்சர் பணித்துள்ளார். அதுமட்டுமல்லாது வருகின்ற ஜனவரி மாதத்திலிருந்து அனைத்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் அனைவரும் போக்குவரத்துக்குரிய அடையாள அட்டை மற்றும் சீருடை அணிவதும் கட்டாயமாக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். -

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar