இந்த விடயத்துள் நான் நழைய விருப்பமின்றி இருந்தேன். ஆனாலும் தெரிந்த உண்மையை மறைப்பது பாவம் என்பதால் இங்கு பதில் சொல்கிறேன்.
முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவர் இன்று சஊதி அரேபியா
என அழைக்கப்படும் அரேபிய தீபகற்பத்தின் ரியாதை சுற்றியுள்ள ஒரு கிராமத்தில் 1600 கால கட்டத்தில் பிறந்தார். அவர் சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் கல்வி கற்ற பின் தனது நாட்டுக்கு திரும்பயிபோது மார்க்கத்துக்கு முரணான பல விடயங்களை கண்டார். அன்றிருந்த அரேபியாவில் சுமார் நூற்றுக்கணக்கான நாடுகள் இருந்தன. இவற்றை பல மன்னர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் துருக்கிய முஸ்லிம் மன்னரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தனர். சில மன்னர்கள் ஹாஜிகளையும் வழிப்பறி செய்பவர்களாக இருந்தனர்.
மக்கா மதினாவுக்கு சென்ற முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அங்கு மரங்களுக்கும் முடிச்சுக்கட்டும் மக்களை கண்டார். கப்றுகளுக்கு முன்னால் சாஸ்டாங்கம் செய்யும் பெண்களையும் கண்டார். இவற்றை அவர் கண்டிக்க முற்பட்ட போது தாக்கப்பட்டார்.
இந்த நிலையில் தனது ஊருக்கு வந்த அவர் தனதூரில் உள்ள இத்தகைய நேர்ச்சை செய்து முடிச்சுக் கட்டும் மரங்களை வெட்டினார். இதனால் மக்கள் இவரை தாக்கினர். இவ்வாறு இருந்த சூழலில் ரியாதின் ஒரு பகுதியில் திர்இய்யாவில் முஹம்மத் இப்னு சுஊத் என்ற குட்டி மன்னர் ஆட்சி செய்து வந்தார். இவரிடம் இப்னு அப்துல் வஹ்ஹாப் பற்றி முறையிடப்பட்டது. இவரை அழைத்த மன்னர் அவரிடம் காரணத்தை வினவினார். அவரது விளக்கம் மன்னருக்கு சரியாக தெரிந்தது.
தனது பிரச்சாரத்தை அரசியல் அதிகாரம் இல்லாமல் முன்னெடுக்க முடியாது என தெரிவித்த இப்னு அப்துல் வஹ்ஹாப், தனக்கு மன்னர் பாதுகாப்பு தர முடியுமா என வினவினார். இதனை ஏற்ற மன்னர் இவரோடு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதாவது, இப்னு அப்துல் வஹ்ஹாப் பிரச்சாரத்தை அனைத்து கிராமங்களிலும் முன்னெடுப்பது இதற்கு பக்கபலமாக மன்னரின் ஆயுதப்படை இருக்கும். அதாவது ஆத்மீகமும் அரசியலும் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டன.
இப்னு அப்துல் வஹ்ஹாப் ஒவ்வொரு கிராமமாக பிரச்சாரத்துக்கு சென்றார். அவருக்கு எதிராக வந்த குட்டி மன்னர் படைகள் இப்னு சுஊத் படையினரால் பிடிக்கப்பட்டனர். இவ்வாறு சில வருடங்களுக்குள் மக்கா மதீனா என்பனவற்றின் ஆட்சியும் இப்னு சுஊத் வசமாகியது. மக்காவிலிருந்த பல கப்றுகள் தரை மட்டமாகின. ஆட்சி தம் வசமிருந்து மாறிப்போனதை கண்ட துருக்கிய முஸ்லிம் மன்னர் இப்னு சுஊதுக்கு எதிராக படையை அனுப்பி அதில் தோல்வி கண்டார். ஆயுத ரீதியாக மோத முடியாது எனக்கண்ட துருக்கியர்கள் அறிவு ரீதியாக மோதினர். முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் பற்றிய பல தவறான கருத்துக்களை பரப்பினர். ஆனாலும் அறபு முஸ்லிம்கள் இதனை நிராகரித்தனர்.
இதன் எதிரொலியாக அறபு முஸ்லிம்களுக்கும் அரேபியர் அல்லாத துருக்கி முஸ்லிம்களுக்கும் மோதல்கள் உருவாகின. இந்த மோதல் விரும்பத்தக்கதாக இல்லாத போதும் தவிர்க்க முடியாததாக அமைந்தது. பொதுவாக இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இறுதி மன்னர்கள் பெரும்பாலும் மார்க்கம் தெரியாதவர்களாகவும் அந்நிய மத கலாச்சாரங்களையும் பின்பற்றுபவர்களாகவே இருந்தனர். இதற்கு இந்தியாவின் முகலாய மன்னர்களையும் உதாரணமாக கொள்ளலாம்.
ஆக இறைவன் இப்னு அப்துல் வஹ்ஹாப் மூலம் சஊதி அரேபயிh என்ற ஒரு நாட்டை உருவாக்கி அங்கு நடந்து கொண்டிருந்த பித்னாக்கள் கொள்ளைகளை நிறுத்தி ஒரே தேசமாக ஆக்கினான். இதைப்பொறுக்க முடியாதவர்கள் இன்று எதையெல்லாமோ சொல்கின்றனர்.
முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் குர்ஆனுக்கு மாற்றமாக ஒரு கருத்தையும் சொன்னதாக நான் அவரது நூல்களில் காணவில்லை. அவ்வாறு இருந்தால் அதனை ஸ்கேன் செய்து இங்கு யாரும் வெளியிடலாம். அதனை விடுத்து நல்லதொரு சீர்திருத்தவாதியை பழிப்பது அழகான செயல் அல்ல.
-முபாறக் அப்துல் மஜீத்