வடமாகாண சபைத் தேர்தலில் கூட நாம் மன்னார் மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டு ஓர் ஆசனத்தைக் கைப்பற்றினோம்.
முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷை கள் தனித்துவம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நாம் தனித்துப் போட்டியிடும் போது எம்மில் காழ்ப்புணர்வு கொண்டவர்கள் தவறான பிரசாரங்களை எடுத்துச் செல்வது வழக்கம்.
எனினும் அரசாங்கத்துக்கும் எமக்குமிடையிலான உறவில் எந்தப் பங்கமும் இல்லை என்பதை நாம் தெளிவாகக் கூறி நிற்கின்றோம்.
நாம் தனித்துக் களமிறங்குவதன் மூலம் தமது இருப்புக்களில் பாதிப்பு வரும் என அஞ்சும் அரசியல்வாதிகளே முஸ்லிம் காங்கிரஸைப் பற்றித் தவறான பிரசாரங்களை முன்னெடுத்துச் செல்வதாக அவர் குறிப்பிட்டார்.