BREAKING NEWS

பாலியல் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது


பெண் ஒருவரிடமிருந்து பாலியல் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹவ பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.
குருநாகல் பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றில் வைத்து இலஞ்சம் பெற முற்பட்ட போதே கைது செய்யப்பட் டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவரிடம் இருந்தே பாலியல் இலஞ்சம் பெற்றுக்கொள்ள முயன்றுள்ளதாகவும் தெரிவிக்கிறது. சந்தேக நபரான பொலிஸ் பொறுப்பதிகாரி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட வுள்ளனர்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar