இவ்விஜயத்தின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்புத் தொகுதி அமைப்பாளரும் அருண் தம்பிமுத்து, பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கியன்-இராசமாணிக்கம் ஆகியோர் சென்றிருந்தனர்.
இவர்கள் வட்டமடு காணிப்பிரச்சனை , இந்து ஆலயங்களின் அபிவிருத்திகள், கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது ,மற்றும் அம்பாறை மாவட்டத்திலிருக்கின்ற காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றமை, மர்மமான முறையில் கால்நடைகள் இறக்கின்றமை, காட்டு யானைகளின் தாக்கம், தொடர்பாக பல கலந்துரையாடல்களில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுடன் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் அபிவிருத்திகளைத் துரிதப் படுத்துவது தொடர்பாகவும் அப்பகுதி பொதுமக்கள் மேற்படி அமைப்பாளர்களிடம் எடுத்தியம்பினர்.
அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக தமிழ் மக்களுக்கு காணப்படும் பிரச்சனைகளை ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்த்துத் தருவதற்கு தான் முயற்சிப்பதாக இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்புத் தொகுதி அமைப்பாளரு அருண் தம்பிமுத்து அவர்கள் அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தார்.