கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையின் வெள்ளிவிழாவுக்கு சுகாதார அமைச்சர் வருவதை தடுத்தமை கல்முனையை இருண்ட யுகத்தில் வைத்திருக்க விரும்பும் அரசியல்வாதிகளின் மோசமான நடவடிக்கையாகும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் மௌலவி குறிப்பிட்டார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,
கல்முனையை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் மன்சூரின் காலமே அபிவிருத்தியின் பொற்காலம் என்பதை அனைவரும் அறிவர். அவருக்குப்பின் கல்முனையை ஆட்சி செய்து வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினர் கல்முனையின் வளங்களை கொள்ளையடிப்பதில்தான் அக்கறை காட்டினார்களே தவிர கல்முனையை தலை நிமிர்ந்து நிற்க வைக்க முயற்சி செய்யவில்லை. இ;ந்த வகையான செயற்பாடே கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையின் வெள்ளிவிழாவுக்கு சுகாதார அமைச்சர் வருகை தருவதற்கும் அதன் மூலம் பாரிய நிதியை பெறவும் முன்னாள் அமைச்சர் மன்சூர் எடுத்த முயற்சிகளை தடுத்தமையாகும். இத்தனைக்கும் மன்சூர் தற்போதைய முஸ்லிம் காங்கரசின் உறுப்பினராவார். அத்துடன் அவரது புதல்வர் அமைச்சர் ரஊப் ஹக்கீமின் இணைப்பாளராக உள்ளார்.
இவ்வாறு தமது கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மன்சூரின் நல்ல முயற்சிக்கு இவர்கள் முட்டுக்கட்டை போடுகின்றார்கள் என்றால் மாற்றுக் கட்சிக்காரர்களின் கல்முனை அபிவித்தி நடவடிக்கைக்கு எத்தனை தீவிரமாக முட்டுக்கட்டை போடுவார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.
எம்மை பொறுத்த வரை அமைச்சர் மன்சூர் அவர்கள் தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக அல்லது கல்முனையை தளமாகக்கொண்ட முஸ்லிம் மக்கள் கட்சியின் உறுப்பினராக இருந்திருந்தால் அவரால் சுயமாக மேலும் பலவற்றை சாதித்திருக்க முடியம். அவர் மு. காவில் சேர்ந்ததன் மூலம் இன்று அவராலும் கல்முனை மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. காரணம் கல்முனை மக்களை கஷ்டப்படுத்தி அவர்கள் மத்தியில் இனவாதம், பிரதேச வாதம் போன்றவற்றை வளர்த்து அவற்றால் வாழ விரும்பும் மு. காவினர் எதையும் செய்யவுமாட்டார்கள், செய்பவரை விடவுமாட்டார்கள்.
இத்தகைய சமூக நலனற்ற கட்சிக்காரர்களுக்கு மக்கள் தேர்தல் காலத்தில் படிப்பினை வளங்கினாலே தவிர கல்முனையை இருண்ட யுகத்திலிருந்து காப்பாற்ற முடியாது என எச்சரிக்கின்றோம்.