கல்முனையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி மற்றும் இன
நல்லிணக்கம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது
சாய்ந்தமருது அலுவலகத்தில் வைத்து மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,
கல்முனை பிரதேசம் இனரீதியாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை சில
அரசியல் நோக்கம் கொண்டவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். அவர்களது தேவை
நீண்ட காலமாக கல்முனைப் பிரதேசத்தில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் தமிழ்
முஸ்லிம் மக்களை பிரித்து அதில் குளிர்காய்வதாகும். இந்த விடயத்தை பயன்
படுத்தி கல்முனை மக்களை பிளவு படுத்த சில பேரினவாத அரசியல் சக்திகளும்
களம் இறங்கியுள்ளதைக் காண முடிகின்றது.
கல்முனையை நிருவாக ரீதியாக தமிழர்கள் வேறாகவும், முஸ்லிம்கள் வேறாகவும்
பிரித்து வாழ முடியாது அவ்வாறு செய்வதென்பது எல்லை நிர்ணய
சட்டவரம்புகளுக்கு அப்பாற்பட்டு செய்ய வேண்டிய செயற்பாடாகும். கல்முனையை
மாத்திரம் அவ்வாறு சிந்திக்க முடியாது காரைதீவு , நாவிதன் வெளி
பிரதேசத்தில் உள்ள பெரும்பான்மை தமிழ் மக்களுடன் சிறுபான்மையாக வாழும்
முஸ்லிம் மக்கள் நிருவாக ரீதியாக ஒன்றித்து வாழ்கின்றனர். அவ்வாறு அவர்கள்
வாழும்போது கல்முனையில் மாத்திரம் பிரிந்து வாழ நினைப்பது எம்மால் ஏற்றுக்
கொள்ளமுடியாது. குறிப்பாக இந்த மண்ணில் பிறந்து வழர்ந்து அன்னியோன்னியமாக
வாழும் எம்மை பிரிப்பதற்கு எடுக்கும் எந்த முயற்சிiயும் நான் எதிர்ப்பேன்
என பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்தார்.
கல்முனை பிரதேச செயலக விடயம் தொடர்பாக இன்று பாராளுமன்ற கட்டிடத்தில் பொது
நிருவாக அமைச்சர் கூட்டமொன்றைக் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில்
நாங்கள் தெளிவாக எமது கருத்தை முன் வைப்போம். இதற்கு மாற்றமாக அமைச்சர்
ஏதாவது நடவடிக்கை எடுத்தால் இந்த விடயத்தை வன்மையாக கண்டித்து ஜனாதிபதியின்
கவனத்துக்கு கொண்டு செல்வோம்.
இந்த விடயத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைமைத்துவமும் நாமும்
ஆழமாக பார்க்கின்றோம். இந்த விடயத்தில் அரசியல் நோக்கத்துக்காக சமூகத்தை
பிளவு படுத்தும் சதி திட்டதில் ஈடுபட்டிருப்பவர்களை இனங்கண்டு கல்முனையில்
வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.