இது என்ன மஹியங்கனை காடு என்றா நினைக்கிறீர்கள். இல்லை. அதிகாலை சுபஹ் பாங்கு சொன்ன பின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டையான கல்முனைக்குடியின் ஜும்ஆ பள்ளிவாயல் வீதி. இந்த இருட்டின் தொங்கலில் புறாக்கூட்டு சந்தி தெரியும். முன்னாள் மேயர் சிராஸ் கல்முனையை வளப்படுத்தியதாக கதையளந்த நிலை இதுதான். இன்னாள் மேயர் நிசாம் காரியப்பரும் ஊடகங்களில் என்னன்னவோ சொல்கிறார். ஆனால் கல்முனைக்குடியின் அதுவும் முஸ்லிம் காங்கிரசின் சென்ரல் கமிட்டி உள்ள வீதியின் நிலை இதுதான். நேற்று அதிகாலை பிடித்த படம் இது.