அரசாங்கத்துடன் இருந்தால் தான் கட்சியைப் பாதுகாக்க முடியும். கட்சியைப் பாதுகாத்தால் தான் சமூகத்தின் பிரச்சினைகளை நிதானமாக தட்டிக் கேட்க முடியும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமாகிய ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நேற்று இரவு திஹாரியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் ஆவேசப்பட்டுப் முஸ்லிம்களின் நிலைமைகள் குறித்துப் பேசும் நிலைமையில் இல்லை. எதனையும் நிதானமாகவே கூறவேண்டியுள்ளது. பொதுபல சேனாவைப் பற்றிய தெளிவான நோக்கு ஜனாதிபதிக்கு உண்டு. அவர் அதனை விட்டுப் பிடிப்பதற்குப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
தற்பொழுதுள்ள அரசியலில் மகிந்த ராஜபக்க்ஷ ஹுசைன் போல்ட் மாதிரி, அவரை வெல்வதற்கு எதிர் தரப்பில் ஒருவரும் இல்லை, ஹுசைன் போல்ட்டிற்குக் கூட வயது செல்லச் செல்ல அவரது வேகம் குறையும், என்றாலும் ஜனாதிபதிக்கு வயது செல்லச் செல்ல அவரது வேகமும் அதிகரித்துக் கொண்டே செலகிறது. இவ்வாறானதோர் சந்தர்ப்பத்தில் நாம் எதிர் கட்சியில் இருந்துகொண்டு எதையும் சாதிக்க முடியாது.
அரசுக்கும் தேவை எமது கட்சியை பலவீனப்படுத்தி தம்முடன் வைத்திருப்பத்ற்கு, இதனை நாம் உணர்ந்து கொண்டு செயற்பட்டு வருகிறோம். அடுத்த வருடம் ஒரு தேசிய மட்டத்திலான தேர்தல் ஒன்று வரவுள்ளது. அந்த நேரத்தில் அரசிற்கு எமது கட்சி தேவைப்படும். அச்சமயத்தில் எமது நிலைபாட்டை நாம் முன்வைப்போம்.
அரசியல் என்பது நாடகம். அரசியல் வாதிகள் அதில் கதாபாத்திரங்கள். ஒவ்வொரு நிலைமைக்கும் ஏற்ப நடித்தால் தான் அரசியல் செய்யலாம். இனவாதிகளினால் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்படும் அநீதிகள் குறித்து நிதானமாக செயற்படவேண்டும். பதுங்கித் தான் பாய வேண்டும் எனவும் நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில்ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம், முஸ்லிம் காங்கிரஸ் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் மற்றும் திஹாரிய முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்கள் உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.