BREAKING NEWS

ஆசிய மன்றத்தினால் கல்முனை மாநகர சபை கறுவறுக்கப்படுகிறதா?

6ஆசியா மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளுர் பொருளாதார ஆளுகை செயற் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையின் வருமானத்தை மேம்படுத்தவும், மக்களிடமிருந்து அறவிடப்படுகின்ற சோலை வரியினை முறையாகப் பேணவும், மாநகர சபையின் வருமானம் மற்றும் செலவுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையிலும் விசேட இணைய சேவையை அமுல்படுத்தும் திட்டத்திற்காக ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான கணனி உபகரணத் தொகுதியொன்று கல்முனை மாநகர சபைக்கு வழங்கப்படடுள்ளது.

கல்முனை மாநகர அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர்- சட்ட முதுமானி நிஸாம் காரியப்பரிடம் ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம். வலீத் குறித்த கணனி உபகரணத் தொகுதியைக் கையளித்தார்.
அத்துடன் மேற்படி விசேட திட்டம் தொடர்பில் ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் விளக்கமளித்ததுடன் இது விடயத்தில் ஆசிய மன்றம் மேற்கொள்ளவுள்ள பங்களிப்புகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கணக்காளர் எம்.சாலிதீன், பொறியியலாளர் ஏ.எச்.ஹலீம் ஜௌசி ஆகியோருடன் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இதே ஆசிய மன்றம் முன்னாள் கல்முனை மேயர் சிராஸ் காலத்திலும் இப்படியான செய்திகளையும் புகைப்படங்களையும் ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்கள். இவர்கள் கல்முனை மாநகர சபை மூலம் மக்களுக்கு உதவுகிறார்களா அல்லது அதனை சேவை செய்வதாக உரியவர்களுக்கு காட்டி சிலரின் பைகள் நிரம்புகின்றனவா என்பவை இன்னமும் மூடுமந்திரமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar