BREAKING NEWS

ஆளுநர்களுக்கான அதிகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடல்


13 வது திருத்தச் சட்டத்திற்கமை வாக மாகாண ஆளுநருக்கு வழங் கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடலொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தலைமையி லான இந்த கலந்துரையாடல் யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியில் நடை பெற்றது.

வடமாகாண செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணத்திலுள்ள மாவட்ட செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலகர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள், கணக்காளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
ஆளுநருக்கு எத்தகைய அதிகாரங்கள் அரசியலமைப்பின் எந்தெந்த சரத்துக்கள் மற்றும் விதிகள் ஊடாக வழங்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் விளக்கமளித்தார். இதனை தொடர்ந்து கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் தமதுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு உரிய விளக்கங்களை ஆளுநர் வழங்கினார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar