BREAKING NEWS

கொழும்பு-கிறேண்ட்பாஸில் கற்கள் பதிக்கப்பட்ட இரண்டு கொங்கிறீட் வீதிகள்


கிறேண்ட்பாஸ் வீதியில் அமைந்துள்ள 132 ஆம் மற்றும் 180 ஆம் இலக்க தோட்டங்களில், கொங்கிறீட் கற்கள் பதிக்கப்பட்ட வீதிகளே, கடந்த செவ்வாய்க்கிழமை மக்கள் பாவனைக்காக  கையளிக்கப்பட்டன.

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம். எச். மன்சிலின்  வேண்டுகோளுக்கிணங்க, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்;தன, ஸ்ரீல. சு. க. மத்திய கொழும்பு அமைப்பாளரும் , முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சருமான “ஜனாதிபதி சட்டத்தரணி”பைஸர் முஸ்தபா ஆகியோர், இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டு, இவ்வீதிகளைத் திறந்து வைத்தனர்.
“மஹிந்த சிந்தனை” தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அமைவாக, துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, இதற்காக 20 இலட்சம் ரூபா நிதியை ஒதிக்கீடு செய்திருந்தது.
இந்நிகழ்வில், திருமதி பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர, கலைஞர் கலைச்செல்வன் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

( படங்கள்:- ஐ. ஏ. காதிர் கான் )

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar