BREAKING NEWS

சீனாவின் சட்டத்தை மீறி 3 குழந்தைகள் பெற்ற சினிமா இயக்குனருக்கு ரூ.7.44 கோடி அபராதம்



சீனாவின் சட்டத்தை மீறி 3 குழந்தைகள் பெற்ற சினிமா இயக்குனருக்கு ரூ.7.44 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பிரபல திரைப்பட இயக்குனர் ஷாங் யிமோவ்.  இவர் பிரபல மாடல் சென் திங்கை மணந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொண்டால், பெற்றோரின் வருமானத்தை கணக்கிட்டு அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும். இதுகுறித்து விசாரணை நடத்திய மக்கள்தொகை அதிகாரிகள், சட்டத்தை மீறி 3 குழந்தைகள் பெற்ற ஷாங் யிமோவுக்கு ரூ.7.44 கோடி அபராதம் விதித்தனர். 
இதுகுறித்து சென் திங் கூறுகையில், ‘‘என் தந்தைக் இறக்கும்போது,  சீன பாரம்பரிய முறைப்படி நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அவரது ஆசையை நிறைவேற்றுவதற்காகத்தான் 3 குழந்தைகளை பெற்றுக்கொண்டேன்’’ என்றார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar