-இர்ஷாத் றஹ்மத்துல்லா-
கொழும்பு மாவட்டத்தில் கடந்த மாகாண சபை தேர்தலில் ஜனநாயக ஜக்கிய முன்னணியில் (துஆ) போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராக தெரிவான முஹம்மத் பாயிஸ், மற்றும் அக்கட்சியில் போட்டியிட்ட அஜித் பெரேரா ஆகியோர் தலைமையிலான ஆதரவாளர்கள் அகில இலங்கை மக்கள் காபங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டனர்.
கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் இடம் பெற்ற கட்சியின் உயர் பீட கூட்டத்தின் போது இவர்கள் இணைந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா, பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல.எஸ்.ஹமீட், பிரதி தலைவர் என்.எம்.சஹீட் ஆகியோரும் பிரசன்னமாயிருந்தனர்.
துஆ கட்சியானது தற்போதைய கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் இயங்கி வந்த கட்சியாகும். கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.