BREAKING NEWS

போலிக்கணக்கெடுப்பை வைத்து சர்வதேசம் கேள்வி கேட்பது தவறு

உயிரிழந்தோர், காணாமற் போனோர் தொடர்பாக புள்ளி விபரத் திணைக்களம் நடத்தும் கணக்கெடுப்பே மிகவும் நம்பகத்தன்மை கொண்டது. சிலரால் போலி யாக தயாரிக்கப்பட்ட கணக் கெடுப்பை வைத்துக்கொண்டே இன்று சர் வதேசம் எம்மிடம் கேள்விகளைக்
கேட்கிறது என பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று தெரிவித்தார்.
பெருந்தோட்டத்துறை அமைச்சு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மா நாட்டின்போதே அமைச்சர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய பொருளாதார கணக்கெடுப்புக்கான முதற்கட்ட அறிக்கை நேற்று அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது நல் லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய புள்ளி விபரத் திணைக்களம் நடத்திய கணக்கெடுப்பு பற்றியும் அவர் கருத்து தெரி வித்தார்.
சிலர் தங்களது புத்தகங்களை விற்பனை செய்துகொள்வதற்காக போலியான தகவல்களை தரவுகளை உள்ளடக்கிப் வெளியிட்டனர். அவற்றை அடிப்படையாகக் கொண்டு சர்வதேசம் எங்களிடம் கேள்விகளை கேட்கிறது.
ஆனால், புள்ளிவிபரத் திணைக்களம் நடத்தியுள்ள கணக்கெடுப்பு நம்பகத்தன்மை கொண்டது. இது சர்வதேசத்துக்கு தேவையான தரவுகளை பிழையின்றி பெற்றுக்கொடுக்க ஏதுவாக அமையும் என்றும் குறிப்பிட்டார். சிலர் தமது புத்தகங்களை விற்பனை செய்வதற்காக யுத்த இழப்புகள் குறித்து வெளியிட்ட தகவல்களை அடிப்படையாக வைத்து சர்வதேசம் எம்மிடம் கேட்டும் கேள்விக்கு புள்ளிவிபரத் திணைக்களத்தின் இக்கணக்கெடுப்பு தக்க பதிலாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar