(பாலாவி நிருபர் ஏ ஏ முனாப்)
எதிர் வரும் 2015ம் ஆண்டு முதல் பெரிய வெங்காய இறக்குமதியை முற்று முழுதாக தடை செய்ய விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
அத்துடன் வர்த்தக நிலையங்களுக்கு தட்டுப்பாடில்லாமல் பெரிய வெங்காயத்தை விநியோகிக்கவும் உரிய முறையில் நவீன தொழில் நுட்ப சாதனங்களை பயன்படுத்தி பெரிய வெங்காய செய்கையில் ஈடு பட அமைச்சு திட்டமிட்டுள்ளது. மாத்தளை, அனுராதபுரம், குருநாகல் பகுதிகளிலும் மகாவலி வலயங்களிலும் வருடாந்தம் 90 ஆய்pரம் மெற்றிக்தொன் பெரிய வெங்காயம் உற்பத்தியாகிறது.