( ஐ. ஏ. காதிர் கான் )
பிரான்ஸின் தலைநகர் பரிஸில் நடைபெறவுள்ள முதலீட்டு வர்த்தக மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று பிரான்ஸ் பயணமானார்.
ஐரோப்பிய சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடைnறும் முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான மாநாடு, எதிர் வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பரிஸில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டே அமைச்;சர் பிரான்ஸ் புறப்பட்டுள்ளார். முதலீடு, வர்த்தகம், வியாபாரம் உள்ளிட்ட விடயங்கள் இங்கு ஆராயப்படவுள்ளன.
2014ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய முதலீடு, வர்த்தகம,; வியாபாரம் போன்ற விடயங்கள் இம்மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளன. பல நாடுகளிலிருந்தும் வர்த்தகம், முதலீட்டுத் துறை சார்ந்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொள்வர்.
இலங்கையில் மேற்கொள்ளப்படவேண்டிய முதலீட்டுத் துறைகள் குறித்து பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா இம்மாநாட்டில் விரிவான விளக்கமொன்றையளிக்கவுள்ளார்.
