ஐ. தே. க. கோட்டையாக உள்ள மத்திய கொழும்பு தொகுதியையும் கொழும்பு மாவட்டத்தையும் மாகாண சபை தேர்தலில் ஐ.ம.சு.மு. வெற்றியீட்டும் என்று குறிப்பிட்ட அவர் ஏனைய இணை அமைப்பாளர்களுடன் இணைந்து கட்சியின் வெற்றிக்காக தொடர்ந்து பாடுபடப்போவதாகவும் கூறினார்.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
ஐ.தே.க. கோட்டையாக இருந்த மத்திய கொழும்பில் எமது கட்சி பலவீனமான நிலையிலே இருந்தது. அதனாலே ஜனாதிபதி என்னை இணை அமைப்பாளராக நியமித்தார். இறுதியாக நடந்த தேர்தலில் 12 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலே ஐ.ம.சு.மு. தோற்றது. இந்த நிலையிலே மற்றொரு இணை அமைப்பாளராக ஹிருணிகாவை ஜனாதிபதி நியமித்தார். அதனை தான் எதிர்ப்பதாக வெளியான செய்திகள் தவறானது. இவரின் நியமனத்தின் மூலம் இளைஞர் யுவதிகளின் வாக்குகளை ஈர்க்க முடியும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.